பாமக காஞ்சிபுரம் வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் ANM.,BBA., அறிவிக்கப்படுகிறார், என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாமக சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. பாமக வேட்பாளர் பட்டியல்:

  • திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
  • அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
  • ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
  • கடலூர் – தங்கர் பச்சான்
  • மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
  • கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்
  • தருமபுரி – சவுமியா அன்புமணி
  • சேலம் – ந. அண்ணாதுரை
  • விழுப்புரம் – முரளி சங்கர்
  • காஞ்சிபுரம் – வெ.ஜோதி வெங்கடேசன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.