உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

கீவ்,

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 வருடங்களை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் இன்னும் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. எனினும் போர் நின்றபாடில்லை. மாறாக இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.அந்தவகையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா 120 ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தேசிய பல்கலைக்கழகம், சுகாதார நிலையம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தன.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பலர் முகாமிட்டு இருந்தனர். எனவே ரஷியாவின் தாக்குதலில் அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.