7 லட்சம் பங்குகள்… உதவி செய்தவர்களுக்கு பிரித்து கொடுத்த IDFC வைத்தியநாதன்..! நெகிழ்ச்சி சம்பவம்!

கடுகளவு உதவியேயாயினும், உதவி செய்யப்பட்ட சூழலைப் பொறுத்து அது மலைபோல தெரியும். வாழ்வில் உச்சத்தை அடைய உதவியவர்களை, நெருக்கடியான சமயங்களில் கை கொடுத்து தூக்கிவிட்டவர்களை பலர் நினைத்து பார்ப்பதுண்டு. சிலர் அதற்கும் ஒரு படி மேலே சென்று அவர்களுக்கு உதவுவதும் உண்டு.

support

அந்தவகையில் ஐடிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ வி.வைத்தியநாதன் மார்ச் 21 அன்று, தனது ஐடிஎஃப்சி வங்கியின் 7 லட்சம் பங்குகளை நெருக்கடியான சமயத்தில் தனது உதவிய ஐந்து பேருக்கு பரிசாக அளித்துள்ளார். தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கில் 1% பங்குகளை வைத்திருக்கிறார், இதன் மதிப்பு 550 கோடி ரூபாய்.

யாருக்கு எவ்வளவு பங்குகள்?!… 

வீடு வாங்க உதவிய நண்பர் கனோஜியா வைத்தியநாதன் என்பருக்கு, அதிகபட்சமாக 2,75,000 பங்குகளை வழங்கி இருக்கிறார். இதே காரணத்திற்காக உதவிய சமீர் மாத்ரேவுக்கும் 50,000 பங்குகள் வழங்கப்பட்டது. 

விமானபடை வீரராக (Wing Commander) இருந்து ஓய்வு பெற்ற சம்பத்குமார் என்பவரிடமிருந்து, நீண்ட காலத்திற்கு முன்பு 1,000 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்காக தற்போது 2.5 லட்சம் பங்குகளைப் பரிசாக வழங்கி உள்ளார்.

இதுதவிர தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியளித்து உதவியதற்காக மயங் மிர்னால் கோஷுக்கு 75,000 பங்குகளையும், தனது நண்பர் மனோஜ் சஹய்க்கு 50,000 பங்குகளையும் பரிசாக வழங்கி இருக்கிறார்.

Teacher

நீ சிங்கம் தான்…

வைத்தியநாதன் தனது பங்குகளைப் பிறருக்குப் பரிசாக கொடுப்பது இது முதல்முறையல்ல. 500 ரூபாய் பணம் கொடுத்து உதவிய முன்னாள் கணித ஆசிரியருக்கு 2020-ல் 30 லட்சம் பங்குகளைக் கொடுத்தார்.

2022 பிப்ரவரி மாதம் 3.95 கோடிக்கு மேல் மதிப்புள்ள 9 லட்சம் பங்குகளை வீட்டுப் பணிப்பெண், பயிற்சியாளர், செக்யூரிட்டி, டிரைவர் என ஐந்து பேருக்கு வீடு வாங்குவதற்காகக் கொடுத்தார். 

2022 மார்ச் மாதம் தன்னோடு பணியாற்றிய சகஊழியரின் இறப்புக்குப் பின்னர், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச பங்குகளை வழங்கினார்.  

நண்பர்கள், ஊழியர்கள், உதவியவர்கள் எனப் பலருக்கும் தொடர்ந்து உதவி வருபவர், ஜனவரி 2018 முதல் வங்கியில் வைத்திருக்கும் தனது பங்குகளில் இருந்து சுமார் 40 சதவிகிதத்தை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும்,

ஞாலத்தின் மாணப் பெரிது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.