IPL 2024: ரோஹித்தை நோக்கி கைநீட்டிய ஹர்திக் பாண்டியா! கடுப்பான ரோஹித் சர்மா!

Gujarat Titans vs Mumbai Indians: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2024 போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது.  மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது.  இதனால் கடைசி வரை போட்டியில் பதற்றம் நிலவியது. இருப்பினும் சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கடந்த சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவங்கள் காரணமாக மைதானத்தில் இருந்த குஜராத் ரசிகர்களால் ஹர்திக் பாண்டியா கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.  டாஸ் போடும் இடத்தில் இருந்து, பீல்டிங் செய்யும் வரை ஹர்திக்கை விமர்சனம் செய்து வந்தனர்.  மேலும் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவை லாங்-ஆனில் பீல்டிங் நிப்பாட்டினார் ஹர்திக் பாண்டியா.  இந்த நடவடிக்கை பலரை ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் ரோஹித் சர்மா எப்போதும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே பீல்டிங் நிற்கமாட்டார். விராட் கோலியின் கேப்டன்சியில் கூட ரோஹித் சர்மா லாங் ஆனில் நின்று யாரும் பார்த்தது இல்லை.  இருப்பினும், கேப்டன் ஹர்திக்கின் முடிவுக்கு செவி சாய்த்து அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பீல்டிங் செய்தார் ரோஹித் சர்மா.  இந்த சம்பவம் ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. 

Never saw Rohit fielding at boundaries
~He always fielded in the 30 Yards circle

Hardik Pandya, Sorry to say but you ain’t a Thalason anymore!

Rohit Sharma deserves better tbvh. feel bad for Hitman #GTvsMI #RohitSharma#HardikPandya #IPL2024
https://t.co/npA2bwPBnI

— Mohammed Aziz (@itsmeaziz07) March 24, 2024

Rohit Sharma giving tips to Hardik Pandya during the strategic timeout. #MIvsGT #GTvsMI #RohitSharma #HardikPandya #Chapri #RRvsLSG pic.twitter.com/2XsI8j9WlG

— Rathore  (@Piyush91624681) March 24, 2024

Honestly, this guy deserves mo#RohitSh_) March 24, 2024

குஜராத் 168 ரன்கள் குவிப்பு

மும்பை அணியின் ஓப்பனிங் பவுலராக ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதில் ஹர்திக் பாண்டியா பந்து வீசினார்.  குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கில், சாய் சுதர்சன் போன்றோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.  ஹர்திக் பாண்டியா, லுக் வுட், சாவ்லா போன்றவர்கள் ரன்களை வாரி வழங்கினாலும் பும்ரா துல்லியமாக பந்து வீசினார்.  4 ஓவரில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்தது.  ஜிடி சார்பில் சாய் சுதர்சன் 39 பந்தில் அதிகபட்சமாக 45 ரன்களும், ஷுப்மான் கில் 31 ரன்களும் எடுத்தனர்.

சற்று எளிய இலக்கை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் இஷான் கிஷன்.  மறுபுறம் ரோஹித் சர்மா தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்தார்.  29 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட 43 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இம்பாக்ட் பிளேயராக வந்த டெவால்ட் ப்ரீவிஸ் 38 பந்தில் 46 ரன்கள் அடித்தார். மும்பையின் பக்கம் இருந்த வெற்றியை குஜராத் பவுலர்கள் இழுத்து தங்கள் பக்கம் கொண்டு சென்றனர்.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.  இதனால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.