Serial Updates: மீண்டும் சீரியலில் நடிக்கும் சரண்யா; கோலாகலமாய் நடைபெற்ற ஶ்ரீதேவியின் வளைகாப்பு!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நடன நிகழ்ச்சி `Dance Jodi Dance Reloaded 2′. இதில் போட்டியாளர்களுள் ஒருவராக சின்னத்திரை நடிகை சரண்யாவும் இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய நடனம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சரண்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான `ஆயுத எழுத்து’ தொடருக்குப் பிறகு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை.

சரண்யா

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’வில் சரண்யா என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே இந்தத் தொடரில் பல நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சரண்யாவின் என்ட்ரியும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நடிகர் கதிருக்கு ஜோடியாக சரண்யா நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரையில் சரண்யா என்ட்ரி கொடுத்திருப்பதற்குப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். 

சின்னத்திரை நடிகையாக பரிச்சயமான முகம் ஶ்ரீதேவி அசோக். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா’ தொடரிலும், `பொன்னி’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு சித்தாரா என்கிற மகள் இருக்கிறார்.

ஶ்ரீதேவி அசோக்

இந்நிலையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை ஶ்ரீதேவி ஏற்கெனவே அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். சமீபத்தில் அவருடைய வளைகாப்பு நிகழ்வு நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் நடிகை நேஹாவும், ஸ்ருதி சண்முகப்பிரியாவும் ஆரம்பம் முதலே பங்கெடுத்து தன் தோழியின் நிகழ்வைச் சிறப்பித்திருக்கிறார்கள். மேலும், ‘பொன்னி’, ‘விக்ரம் வேதா’ டீம், `தென்றல்’ ஸ்ருதி ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஶ்ரீதேவி அசோக்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.