RCB vs PBKS: விராட் கோலி கொடுத்த மாஸ் ஸ்பீச்! என்ன செய்ய போகிறது பிசிசிஐ?

பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் ஐபிஎல் 2024ல் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.  இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெரும் வாய்ப்பு இருந்த இந்த போட்டியில் விராட் கோலி 49 பந்தில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். முதல் ஓவரில் இருந்தே அதிரடி காமித்த விராட் கோலி தான் ஒரு சிறந்த டி20 பேட்டர் என்பதை நிரூபித்துள்ளார். கடைசி சில ஓவர்களில் மஹிபால் லோமரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் சிறப்பாகா விளையாட ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Player Of The Match: Virat Kohli

First win of the season 
Orange Cap 
Most half centuries by an Indian in T20 cricket #PlayBold RCB #IPL2024 pic.twitter.com/xk9GP6wDQq

— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 26, 2024

இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த விராட் கோலி தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளில் விளையாடி வருகிறார்.  இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற ஐசிசி டி20 உலக கோப்பை அணியில் விராட் கோலி இருக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.  சிலர் அங்கு பிட்ச் மெதுவாக இருக்கும், விராட் கோலிக்கு அது சரியாக இருக்காது என்றும் கூறி வருகின்றனர்.  இப்படி விராட் கோலியின் தேர்வு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கும் நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பின்னர் விராட் இது குறித்து பேசி உள்ளார். “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக எனது பெயர் இப்போது இணைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். நான் அதை இன்னும் பெற்றிருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களிடம் இருந்து தனக்குக் கிடைத்த அன்பைப் பற்றியும் கோலி கருத்துத் பகிர்ந்துள்ளார்.  “இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது மக்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள். சாதனை, புள்ளிவிவரங்கள், எண்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது அது நீங்கள் உருவாக்கும் நினைவுகள் மட்டும் தான். மேலும் எனக்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமாக உள்ளது” என்று கோலி கூறினார்.

கோலியின் சாதனை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சின்னசாமி ஸ்டேடியத்தில் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 100வது அரைசதத்தை எட்டினார். இந்த போட்டியில் விராட் கோலி வெறும் 31 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். டி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி. இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வார்னர் முன்னிலையில் உள்ளனர்.  இது கோலியின் 51வது ஐபிஎல் அரைசதமாகும், மேலும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வாழ்க்கையில் 7 சதங்களை அடித்துள்ளார். 2022ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியிலும் கோலி சதம் அடித்துள்ளார். கெய்ல் 110 அரைசதத்துடன் முதலிடத்திலும், வார்னர் 109 அரை சதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.