Triumph Trident 660 special edition – டிரையம்ப் ட்ரைடென்ட் 660 சிறப்பு எடிசன் வெளியானது

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் Isle of Man TT வெற்றியை கொண்டாடும் வகையில் ட்ரைடென்ட் 660 பைக்கில் ‘Slippery Sam’ என்ற பெயரில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது.

1970களில் 5 முறை தொடர்ந்து டிரையம்ப் நிறுவனத்தின் Slippery Sam 750cc ட்ரைடென்ட் ரேஸ் பைக்கினை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மாடலில் 67 என்ற எண் பெற்று நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

Triumph Trident Triple Tribute

  • சிலிப்பெரி சாம்: 67 என்ற ரேசிங் எண் பெற்றுள்ள சிறப்பு பதிப்பின் உற்பத்தி ஒரு ஆண்டு மட்டுமே நடைபெற உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து வாங்கலாம்.
  • எஞ்சின் விபரம் : 660cc இன்லைன் மூன்று சிலிண்டர் எஞ்சின் பெறுகின்ற பைக் அதிகபட்சமாக 80 bhp மற்றும் 64 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளது.
  • இந்திய வருகை : குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட உள்ள இந்த சிறப்பு பதிப்பு இந்தியாவிலும் நடப்பு ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.

இந்த சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிளின் நிறத்தை தவிர மற்றபடி கூடுதலாக பெல்லி பேன், ஃபிளை ஸ்கீரின் உள்ளது.

triumph trident 660 special edition 67

மற்ற மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் பெற்றுள்ளது. பிரேக்கிங் முன்புறத்தில் 310 மிமீ இரட்டை டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 225 மிமீ சிங்கிள் டிஸ்க் உள்ளது.

டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவ் வசதிகளை பெற்றுள்ள டிரைடென்ட் 660 மாடலில் ரோடு மற்றும் ரெயின் என இரண்டு ரைடிங் மோடுகளை பெற்று டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கட்டுப்பாடு உள்ளது.

தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டிரையம்ப் ட்ரைடென்ட் 660 விலை ரூ.8.25 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைப்பதனால், ஸ்பெஷல் எடிசன் மாடல் விலை ரூ.9 லட்சத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றோம்.

triumph trident 660 special edition rear

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.