மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! என்ன செய்ய போகிறார் ஹர்திக் பாண்டியா?

Suryakumar Yadav Injury Update: ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது காயம் ஏற்பட்ட சூர்யகுமார் யாதவ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவர் ஐடம் பெறவில்லை. முன்னதாக ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் சூர்ய விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.  மும்பை அணி விளையாடுள்ள முதல் இரண்டு லீக்கில் ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் ஆரம்பிக்கும் முன்பு, மும்பை தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி குறித்த முழு விவரம் தெரியவில்லை என்று கூறி இருந்தார். 

Suryakumar Yadav might miss a few more games to get match fit for Mumbai Indians. [PTI] pic.twitter.com/fxoanyhErJ

— Johns. (@CricCrazyJohns) March 28, 2024

இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் காயம் இன்னும் சரியாகவில்லை என்றும், ஐபிஎல்லில் விளையாட இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.  பிசிசிஐயின் மருத்துவ குழு சூர்யகுமார் யாதவ் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.  ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இரண்டு அறுவை சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்.  எவ்வாறாயினும், இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

“சூர்யகுமார் யாதவ் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார், விரைவில் அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார். இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்டது போல அவர் இன்னும் சில போட்டிகளை தவறவிட கூடும்” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சூர்யகுமார் யாதவ் இருந்து வருகிறார். 171.55 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் இந்தியாவுக்காக 60 டி20 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 2141 ரன்கள் எடுத்துள்ளார்.

மும்பை அணி

இந்த ஆண்டு ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அவரின் தலைமையில் மும்பை அணி விளையாடி உள்ள முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 277 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 246 ரன்கள் மட்டுமே அடித்தது.

WHAT. A. MATCH! 

Raining sixes and 500 runs scored for the first time ever in #TATAIPL 

Hyderabad is treated with an epic encounter 

Scorecard  https://t.co/oi6mgyCP5s#SRHvMI pic.twitter.com/hwvWIDGsLh

— IndianPremierLeague (@IPL) March 27, 2024

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.