Hardik Pandya: ஹர்திக் பாண்டியா செய்யும் தவறுகள்… மும்பை கேப்டன் மீது எழும் விமர்சனங்கள்!

IPL 2024 Hardik Pandya: ஐபிஎல் தொடர் என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும். அதேதான், நேற்றைய ஹைதராபாத் – மும்பை போட்டியிலும் நடந்தது எனலாம். டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்த மும்பை அணிக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரிய ஷாக்கை கொடுத்தது எனலாம். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை குவித்தது. 

சன்ரைசர்ஸ் சார்பில் கிளாசென் 80 ரன்களையும், அபிஷேக் சர்மா 63 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களையும் குவித்தனர். மார்க்ரம் 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, ஹர்திக் பாண்டியா, கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். பும்ரா விக்கெட் எடுக்காவிட்டாலும் அவரின் எகனாமி 9 தான். ஹர்திக் பாண்டியா 11.50 எகனாமி வைத்திருக்க, மற்றவர்கள் அனைவருக்கும் 14க்கும் மேல்தான் எகானமி இருந்தது. 

அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் 

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கிலும் நல்ல கம்பேக்கை கொடுத்தது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஆகியோர் நல்ல தொடக்க அளித்தாலும், மிடில் ஓவர்களில் சற்றே ரன் சுணக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் டிம் டேவிட் சற்று தடுமாறினாலும் அடுத்து அதிரடி காட்ட தொடங்கிவிட்டார். ஹர்திக் பாண்டியாவால் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளுக்கு 246 ரன்களையே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. 16 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

உலகில் உள்ள அனைத்து வடிவங்களிலும் இல்லாவிட்டாலும், உலகின் இந்த வடிவத்தில் சிறந்த பந்துவீச்சாளர் உங்களுக்கு கிடைத்தால், அவர் நிச்சயமாக இந்த உலகின் வடிவமாகத் தான் இருப்பார், அவர் உங்களுக்குச் செல்லக்கூடியவர். முதல் 10 ஓவர்களில் அவர் ஒரு ஓவர் வீசுவார் என்பது உங்களுக்குத் தெரியும். முதல் அல்லது இரண்டாவது ஓவரில் அவர்கள் இரண்டு ஸ்விங் பந்துவீச்சு விருப்பங்களைப் பயன்படுத்த விரும்பினால், நான் அதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஜஸ்பிரித் பும்ரா பவர்பிளேயில் இரண்டு ஓவர்கள் வீச வேண்டும், அவர் மேசைக்குக் கொண்டு வந்ததன் காரணமாக மட்டுமே.

Where is Jasprit Bumrah?? Game nearly done and your best bowler has only bowled ONE over! #SRHvMI

— Tom Moody (@TomMoodyCricket) March 27, 2024

ஹர்திக் பாண்டியா மீதான குற்றச்சாட்டு

இந்த போட்டியில் மும்பை சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது சமூக வலைதளங்களில் ரசிகர்களாலும், நெட்டிசன்களாலும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முதல் போட்டியிலேயே பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்களை கொடுப்பதில் ஹர்திக் பாண்டியா மீது கடும் குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்நிலையில், 2016இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லும்போது பயிற்சியாளராக இருந்த அணியின் டாம் மூடியும் ஹர்திக் பாண்டியா மீது X தளத்தில் விமர்சனம் வைத்துள்ளார். 

Hyderabad a batting paradise tonight. 523 runs in 40 overs. Captaincy becomes even more important when the ball flies! #SRHvMI

— Tom Moody (@TomMoodyCricket) March 27, 2024

அவர்,”பும்ரா எங்கே? ஏறத்தாழ போட்டி கைவிட்டு போய்விட்டது. இதுவரை உங்களின் சிறந்த பந்துவீச்சாளர் ஒரே ஒரு ஓவரைதான் போட்டிருக்கிறார்” என விமர்சனம் செய்திருந்தார். அதேபோல், பும்ராவுக்கு பவர்பிளேவில் ஒரே ஒரு ஓவரை மட்டும் வழங்கும் ஹர்திக் பாண்டியாவின் முடிவையும், டாம் மூடி விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றில் பேசிய அவர்,”பவர்பிளேவில் முக்கிய குறிக்கோளே விக்கெட் எடுப்பதுதான். அவர்தான் உங்களின் சிறந்த விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர், எப்போதும் அவர் உங்களின் சிறந்த பந்துவீச்சாளர். அவரை காத்திருக்க வைப்பது சரியாக இருக்காது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.