வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை டிஜிட்டல் மயமாக்கப்படும் என்ற நற்செய்தியுடன் மாத்தளை சென்ற ஜயகாமு ஸ்ரீலங்கா இன்று இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுடன் வவுனியாவிற்கு வருகை தந்துள்ளது.

உலகம் தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில், தீர்வுகளை விரைவில் மேற்கொள்ள வேண்டிய நிலை நாட்டில் உள்ள பலருக்கு நம்பிக்கைக் கலங்கரை விளக்காக மாறியுள்ளது. நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில், தொழிலாளி தனது வேலைத்தளத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், அதை தீர்வு காண்பதற்கு இடையிலான தாமதம் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரஅவர்களின் நடைமுறைப்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் முறையானது வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் தெரிவித்தார் 

ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக கடந்த சனிக்கிழமை (22 ) அன்று நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார் .

மேலும் இங்கு கறுத்தது தெரிவித்த அமைச்சர் 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தற்போதைய அமைப்பு மற்றும் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவது தீர்வாக ஆமையும் என அமைச்சர் தெரிவித்தார் . 

இச்செயற்பாடு மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை கடத்தல்காரர்கள் மற்றும் மோசடியாளர்களின் பிடியில் இருந்து பாதுகாக்க முடியும். 

அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதோடு, குறைகளைக் கையாளும் நடைமுறைகளையும் மேம்படுத்தும்.

இம் முயற்சி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தேவையற்ற தலையீடுகளை முறியடிப்பதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை திறம்பட எதிர்த்து செயற்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் .

“வெளிநாட்டு வெளிவாய்ப்புத்துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்போது ஒரே நேரத்தில் தூதரகம் மற்றும் SLBFE ஆகிய இரண்டிற்கும் தெரிவிக்க

அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தொலைபேசியிலும் ஒரு ‘செயலி ‘ இருக்கும். அதணூடக அவர் சுகயீனம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் நிலையில் இருக்கும்போது எமது தூதரகத்தில் உள்ள SLBFE பணியாக அதிகாரிகளுடன் தொடர்புகளை எற்படுத்த முடியும்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக தொடர்பு கொள்ளும் அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதனால் இத்துறையில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய சட்டத்தின்படி, உப முகவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை.

உப முகவர்களை கையாள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டம் திருத்தப்பட்டு தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே அது விரைவில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.