டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ Pova 6 புரோ 5ஜி என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Pova 6 புரோ: சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் ஃபுள் ஹெச்டி AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6080 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் 3 கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • நோட்டிபிகேஷன் மற்றும் அலர்ட்களை சுட்டிக்கட்டும் டைனமிக் 2.0 அம்சம்
  • 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் இரண்டு வேரியன்ட்
  • 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 6,000mAh பேட்டரி
  • 70 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • வரும் 4-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது
  • இந்த போனின் விலை ரூ.19,999 மற்றும் ரூ.21,999 என அறிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.