“Dunhinda Odyssey'' புதிய ரயில் சேவை இன்று முதல்…

புகையிரத சேவைக்கு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (05) முதல் “Dunhinda Odyssey” என்ற விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சொகுசு சுற்றுலா புகையிரதம் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு பதுளை நோக்கி புறப்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் அதிக கோரிக்கைக்கு அமைய வாரத்திற்கு மூன்று தடவைகள் இப்புகையிரதச் சேவை காணப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உள்நாட்டு; தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட “Galaxy Saw”‘ என்ற பெயரில் நாளாந்தம் பயணிக்கும் சுற்றுலா ரயில் சேவையொன்று பண்டாரவளையில் இருந்து தெமோதர வரை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.