What to watch on Theatre & OTT: கள்வன், The Family Star – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கள்வன் (தமிழ்)

கள்வன்

பி.வி. சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா, பாரதிராஜா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கள்வன்’. ஊருக்குள் சின்னச் சின்ன திருட்டில் ஈடுபட்டு வரும் ஜி.வி பிரகாஷ், வனக் காவலர் பணியில் சேர ஆசைப்படுகிறார். 2 லட்சம் கொடுத்தால்தான் அப்பணியில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட, அதற்காக பல சதிச் செயல்களைச் செய்ய முயல்கிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாஷ், ஏன் பாரதிராஜாவை தாத்தாவாகத் தத்தெடுக்கிறார், அவர் ஆசைப்பட்ட வனக் காவலர் பணி கிடைத்ததா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒயிட் ரோஸ் (தமிழ்)

ஒயிட் ரோஸ்

ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி, ஶ்ரீதரன், விஜித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வல்லவன் வகுத்ததடா (தமிழ்)

வல்லவன் வகுத்ததடா

விநாயக் துரை இயக்கத்தில் தேஜ் சரண்ராஜ், அனன்யா மணி, ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வல்லவன் வகுத்ததடா’. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

டபுள் டக்கர் (தமிழ்)

டபுள் டக்கர்

மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டபுள் டக்கர்’. அனிமேஷன், காமெடி, பேன்டஸி திரைப்படமான இது நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒரு தவறு செய்தால் (தமிழ்)

ஒரு தவறு செய்தால்

மணி தாமோதரன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், உபாசனா, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒரு தவறு செய்தால்’. சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆலகாலம் (தமிழ்)

ஆலகாலம்

ஜெயா கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் ஈஸ்வரி ராவ், பாபா பாஸ்கர், தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆலகாலம்’. இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இரவின் கண்கள் (தமிழ்)

இரவின் கண்கள்

சுரேஷ் குமரன் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘இரவின் கண்கள்’. சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான இது நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Family Star (தெலுங்கு)

The Family Star

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Family Star’. நடுத்தர குடும்ப இளைஞனின் காதல், நட்பு, வேலை, குடும்பத்தின் அன்பைச் சொல்லும் இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Love Lies Bleeding (ஆங்கிலம்)

Love Lies Bleeding

ரோஸ் க்ளாஸ் இயக்கத்தில் கிறிஸ்டன் ஸ்டீவர்ட், கேட்டி ஓ’பிரையன், ஜெனா மலோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love Lies Bleeding’. ஈகோ, பேராசை மற்றும் பெரும் அமெரிக்க கனவு ஆகியவற்றைக் கொண்டுள்ள காதல் ஜோடிகளின் கதை இது. இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The First Omen (ஆங்கிலம்)

The First Omen

அர்காஷா ஸ்டீவன்சன் இயக்கத்தில் நெல் டைகர் ப்ரீ, தவ்கீஃப் பர்ஹோம், ரால்ப் இன்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The First Omen’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஏப்ரல் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது ஏற்கெனவே வெளியான ‘ஓமன்’ படத்தொடரின் முதல் பாகத்தின் முன்கதை.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Música (ஆங்கிலம்) – Amazon Prime Video

Música

ரூடி மன்குசோ இயக்கத்தில் ரூடி மன்குசோ, கமிலா மென்டிஸ், பிரான்செஸ்கா ரியல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Música’. காதல், காமெடி நிறைந்த இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Scoop – Netflix

Scoop

பிலிப் மார்ட்டின் இயக்கத்தில் கில்லியன் ஆண்டர்சன், ரூஃபஸ் செவெல், பில்லி பைபர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Scoop’. பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூவுடனான பிபிசி ஊடகத்தின் நேர்காணலை வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

How to Date Billy Walsh (ஆங்கிலம்) – Amazon Prime Video

How to Date Billy Walsh

அலெக்ஸ் இயக்கத்தில் லூசி பஞ்ச், நிக் ஃப்ரோஸ்ட், குஸ் கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘How to Date Billy Walsh’. காதல், காமெடி நிறைந்த இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

Family Aaj Kal (இந்தி) – SonyLIv

Family Aaj Kal

பரீக்ஷித் ஜோஷி இயக்கத்தில் பிரகார் சிங், அபூர்வா அரோரா, நித்தேஷ் பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் ‘Family Aaj Kal’. காமெடிகள் நிறைந்த ஃபேமலி வெப்சீரிஸான இது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

A Gentleman in Moscow (ஆங்கிலம்) – Amazon Prime Video

A Gentleman in Moscow

சாம் மில்லர், சாரா ஓ’கோர்மன் ஆகியோரின் இயக்கத்தில் இவான் மெக்ரிகோர், டேனியல் செர்குவேரா, ஃபெஹிந்தி பலோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘A Gentleman in Moscow’. திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ripley (ஆங்கிலம்) – Netflix

Ripley

ஸ்டீவன் ஜைலியன் இயக்கத்தில் ஆண்ட்ரூ ஸ்காட், ஜானி ஃபிளின், டகோட்டா ஃபேனிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Ripley’. க்ரைம், திரில்லர் சீரிஸான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Parasyte: The Grey (ஆங்கிலம்) – Netflix

Parasyte: The Grey

ஹிட்டோஷி இவாகி இயக்கத்தில் கூ கியோ-ஹ்வான், ஜியோன் சோ-நீ, ஜங் ஹியூன் லீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Parasyte: The Grey’. சயின்ஸ் ஃபிக்சன், ஹாரர் திரில்லர் படைப்பான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Sugar (ஆங்கிலம்) – Apple TV+

Sugar (ஆங்கிலம்) – Apple TV+

பெர்னாண்டோ மீரெல்ஸ், ஆடம் ஆர்கின் ஆகியோர் இயக்கத்தில் கொலின் ஃபெரெல், கிர்பி, ஆமி ரியான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Sugar’. க்ரைம், திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Apple TV+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

Farrey (இந்தி) – Zee5

Farrey

சௌமேந்திர பதி இயக்கத்தில் அலிசே அக்னிஹோத்ரி, ஜூஹி பாபர், பிரசன்னா பிஷ்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Farrey’. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Wish (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Wish

கிறிஸ் பக், ஃபான் வீரசுந்தோர்ன் இயக்கத்தில் அரியானா டிபோஸ், கிறிஸ் பைன், ஆலன் டுடிக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wish’. கார்ட்டூன் பேன்டஸி திரைப்படமான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Juni (தெலுங்கு) – Amazon Prime Video

Juni

வைபவ் மாதவ் இயக்கத்தில் ப்ருத்வி அம்பர், அவினாஷ், ரிஷிகா நாயக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Juni’. காதல் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Lambasingi (தெலுங்கு) – Disney + Hotstar

Lambasingi

நவீன் காந்தி இயக்கத்தில் கிட்டய்யா, பரத் ராஜ், வம்சி ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘Lambasingi’. காதல் திரைப்படமான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kismath (தெலுங்கு) – Amazon Prime Video

Kismath

ஸ்ரீநாத் பதினேனி இயக்கத்தில் அபினவ் கோமதம், ஸ்ரீனிவாஸ் அவசராலா, நரேஷ் அகஸ்தியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kismath’. காமெடி திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.