என் வாழ்நாளில் மறக்க முடியாத நபர் : ஆர்.எம் வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்

தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக., அமைச்சருமான ஆர்எம் வீரப்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ஆர்எம்வி., பணத்திற்கு பின்னால் என்றும் போனது கிடையாது. அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் அரசியலில் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என வாழ்ந்தவர். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நபர் அவர். அவருடன் எனக்கான நட்பு ஆழமானது, உணர்ச்சிகரமானது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸில் “இராணுவ வீரன், மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா” என 6 படங்களில் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா அஞ்சலி
ஆர்எம் வீரப்பன் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் அஞ்சலி
முன்னதாக மருத்துவமனையில் இருந்த ஆர்எம் வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.