சிவம் துபே முதல் மயங்க் யாதவ் வரை! டி20 உலக கோப்பையில் இடம் பெரும் இளம் வீரர்கள்!

T20 Worldcup 2024: கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பைனலில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்ல தவறியது. இதனால் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டி20 உலக கோப்பை காண இந்திய அணியை தேர்ந்தெடுப்பதில் தற்போது கவனம் சென்று வருகிறது. ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் பல இளம் வீரர்கள் தங்களை திறமையை நிரூபித்துள்ளனர். 

இந்த வருடம் டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்த தீவுகளில் நடைபெற உள்ளதால் அந்த மைதானங்களுக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஏப்ரல் கடைசி வரை காலக்கெடு உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை, யார் யார் அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  இந்நிலையில் ஐபிஎல் 2024ல் தற்போது சிறப்பாக விளையாடி வரும் மூன்று இளம் வீரர்கள் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. அவர்களை பற்றி பார்ப்போம்.

மயங்க் யாதவ்: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்லில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பவர் மயங்க் யாதவ். தனது வேகம், சிறப்பான பந்துவீச்சு மற்றும் விக்கெட் எடுக்கும் திறன் ஆகியவற்றால் மயங்க் யாதவ் அனைவரையும் கவர்ந்துள்ளார்.  21 வயதான இவர் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லாமல் இருந்தாலும், அணியில் இடம்பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல்லில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஒரு ஓவர் மட்டும் பந்துவீசி வெளியேறினார்.

சிவம் துபே: இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட சிவம் துபே ஐபிஎல்லில் சென்னை அணியில் விளையாடி ஸ்டார் பிளேயராக உயர்ந்துள்ளது. இடது கை பேட்டிங்-ஆல்ரவுண்டரான துபே சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் முக்கியமான வீரராக உள்ளது. இவரது சிக்ஸ் அடிக்கும் திறன் தேர்வாளர்களை புறக்கணிக்க முடியாதபடி செய்துள்ளது.  துபே XIல் இடம் பெறாமல் போகலாம் என்றாலும் 16 பேர் கொண்ட அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ரிஷப் பந்த்: 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்திற்கு பிறகு கடந்த ஒரு வருட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார் ரிஷப் பந்த். தற்போது கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.  விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் இதே பார்மில் இருந்தால் டி20 உலக கோப்பை காண இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான உத்ததேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (C), விராட் கோலி, ஷுப்மான் கில் / யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), ரின்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன் (WK), ரவி பிஷ்னோய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.