படத்தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார்!

எம்.ஜி.ஆர்.கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன், வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98.

அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் அவர். திரைப்படத் துறையிலும் சிறந்து விளங்கினார். கதை வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’ உட்பட எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார்.

ஆர்.எம்.வீரப்பன்

அதைப் போல ரஜினியின் ‘பணக்காரன்’, ‘ராணுவ வீரன்’ ‘மூன்று முகம்’, ‘ஊர்க்காவலன்’ எனப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். கமலை வைத்தும் ‘காதல் பரிசு’, ‘மூன்றாம் பிறை’ எனப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்திருக்கிறார்.

ஆர்.எம்.வீரப்பன் இன்று காலை காலமானார். அவரது மகன் வெளிநாட்டிலிருந்து வரவேண்டியிருப்பதால், இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.