வோடஃபோன் ஐடியா சரவெடி பிளான்! 49 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா – ஜியோ, ஏர்டெல் கலக்கம்

மொபைல் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்ப்பதில் மிகப்பெரிய யுத்தமே ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இடைய நடந்து கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல் முதல் இரு இடங்களில் இருந்தாலும் வோடாஃபோன் ஐடியா இந்த போட்டியில் கடைசி இடத்தில் தான் இருக்கிறது. இருப்பினும் தங்களின் இடத்தை தக்க வைக்க கடுமையாக போராடிக் கொண்டும் இருக்கிறது. சூப்பர் பிளான்களை அவ்வப்போது களமிறங்கி ஜியோ ஏர்டெல் நிறுவனங்களுக்கு செம ஷாக் கொடுக்கும். அப்படியான திட்டத்தை தான் இப்போதும் விஐ (Vodafone Idea) நிறுவனம் களமிறக்கியுள்ளது. அதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய 49 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தில் இப்போது கூடுதல் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது.

வோடாஃபோன் ஐடியா கூடுதல் டேட்டா

இதற்கு முன்பு 49 ரூபாய் திட்டத்தில் 6ஜிபி டேட்டா மட்டுமே வோடாஃபோன் ஐடியாவில் கிடைத்தது. இப்போது அது 20ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூடுதல் செலவு இல்லாமல் ரூ.49 திட்டத்திலேயே இந்த டேட்டா ஆட்ஆன் சேர்க்கப்பட்டிருக்கிறது. கவலையளிக்ககூடிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பிளானின் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். எந்த நேரத்தில் இந்த பிளானை நீங்கள் வாங்கினாலும் நள்ளிரவு 12 மணிக்கு காலாவதியாகிவிடும். இந்த பிளானின் முழு பலனையும் நீங்கள் பெற விரும்பினால் இரவு 12 மணிக்குப் பிறகு வாங்கிவிட வேண்டும். அப்போது முழு 24 மணி நேரத்துக்கு இந்த பிளானை உபயோகப்படுத்தலாம். இந்த திட்டத்தில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MYVI செயலியில் ரீச்சார்ஜ் செய்யலாம்

VI இன் இணையதளம் அல்லது அவர்களின் MYVI செயலியில் இருந்து VI இன் இந்தத் டேட்டா திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் வேலை செய்கிறது. நீங்கள் ஃபோனில் அல்லது Paytm போன்ற பிற செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். VI தனது ப்ரீபெய்ட் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் மேலும் மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது. மலிவான விலையில் அதிக டேட்டாவை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 5G சேவைகளை இன்னும் தொடங்க முடியவில்லை என்பதால் இருக்கும் சேவைகளில் பெஸ்டை கொடுக்க முயற்சிக்கிறது. இப்போது மொபைல் வைத்திருப்பவர்கள் அதிக டேட்டா பிளானை தேடிக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த பிளானை அறிமுகப்படுத்தியிருக்கிறது விஐ நிறுவனம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.