குடிநீர் தொடர்பான தேசிய கொள்கை மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை

சமகால மற்றும் எதிர்கால தேவைகளுக்குப்  பொருத்தமான வகையில் ‘குடிநீர் தொடர்பான தேசியக் கொள்கை  மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை’ ஏற்புடைய ஏனைய கொள்கைகளுடன் பொருத்தமான வகையில் ஒருங்கிணைத்து⁹ நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும்  பாதுகாப்பானதும்  தரப்பண்பானதுமான குடிநீருக்கான அணுகலை உறுதிப்படுத்தல்,  பேண்தகு வகையிலான நீர்ப் பாவனையை ஊக்குவித்தல் மற்றும்  நீர்த் துறையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக (08.04.2024) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

01.     குடிநீர் தொடர்பான தேசிய கொள்கை மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை

குடிநீர் வழங்கல் சேவைப் பிரிவில் உருவாகியுள்ள போக்குகள் மற்றும் சவால்களுக்கு  முகங் கொடுப்பதற்காக மிகவும் விரிவானதும் காலத்தோடு தழுவியதுமான அணுகுமுறையின் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த துறைசார் நிபுணர்களதும் பங்காளர்களதும்  ஆலோசனைகளையும், மக்கள் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு சமகால மற்றும் எதிர்கால தேவைகளுக்குப்  பொருத்தமான வகையில் ‘குடிநீர் தொடர்பான தேசியக் கொள்கை  மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும்  பாதுகாப்பானதும்  தரப்பண்பானதுமான குடிநீருக்கான அணுகலை உறுதிப்படுத்தல்,  பேண்தகு வகையிலான நீர்ப் பாவனையை ஊக்குவித்தல் மற்றும்  நீர்த் துறையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.  அதற்கமைய  ‘குடிநீர் தொடர்பான தேசியக் கொள்கை  மற்றும்  நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை’ ஏற்புடைய ஏனைய கொள்கைகளுடன் பொருத்தமான வகையில் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.