ஐபிஎல்லில் ஆமை வேகத்தில் சதம் அடித்த 5 பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா?

இந்த ஆண்டு ஐபிஎல் 2024 போட்டியில் விராட் கோலி ஐபிஎல்லில் தனது மெதுவான சதத்தை பதிவு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் அவர் 67 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 183/3 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 72 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்து இருந்தது. ஐபிஎல்லில் அதிக பந்தில் சதம் அடித்த 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிக மெதுவாக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 பந்துகளில் 113 ரன்கள் அடித்து இருந்தார். 20 ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 183 ரன்கள் அடித்து இருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.  

மணீஷ் பாண்டே

மெதுவாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் மணீஷ் பாண்டே முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். ஐபிஎல்லில் சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த முதல் வீரர் மனிஷ் பாண்டே ஆவார். ஐபிஎல் 2009 சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்து இருந்தார் மணீஷ் பாண்டே. அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய மணீஷ் பாண்டேவின் சதத்தால் 170/4 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  

ஜோஸ் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் 66 பந்துகளில் சதம் அடித்து இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். ஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் 66 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 193/8 ரன்கள் அடித்து இருந்தது.  இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. 

டேவிட் வார்னர்

மெதுவாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 2வது இடத்தில் ஜோஸ் பட்லருடன் உள்ளார். அவர் 66 பந்துகளில் சதம் அடித்தார்.  ஐபிஎல் 2010ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய வார்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் சதம் அடித்தார்.  டேவிட் வார்னர் 69 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது.  

சச்சின் டெண்டுல்கர்

மெதுவாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இரண்டாவது இடத்தில் உள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது 66 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 182/2 ரன்கள் அடித்து இருந்தது.  ஆனால் வெறும் 19 ஓவரில் 184 ரன்கள் அடித்து கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி வெற்றி பெற்றது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் சதம் வீணானது. தொடக்க ஜோடியான பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் மஹேல ஜெயவர்த்தனே கொச்சிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.  இந்த சேஸில் 13.5 ஓவர்களில் 128 ரன்கள் அடித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.