`டாட்டூக்களை 15 நாள்களுக்குள் நீக்க வேண்டும்' – ஒடிசா பட்டாலியன் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

ஒடிசா சிறப்பு பாதுகாப்பு பட்டாலியன் (Special Security Battalion) அதிகாரிகள், தங்கள் உடலிலிருக்கும் டாட்டூக்களை 15 நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று ஒடிசா காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் ஒடிசா காவல்துறை துணை ஆணையர் (பாதுகாப்பு) சுதாகர் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், `குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆண் அதிகாரிகள் தங்களின் உடலில் டாட்டூ போட்டிருப்பதைக் காண முடிகிறது. இது பட்டாலியன் மற்றும் ஒடிசா காவல்துறையின் இமேஜை இழிவுபடுத்துகிறது. ஏனெனில், இத்தகைய டாட்டூக்கள் ஆபாசமானவை மற்றும் இழிவானவை.

டாட்டூ

எனவே, சீருடை அணிந்திருக்கும் போதும் வெளியில் தெரியும் வகையில் டாட்டூக்கள் போடுவதற்கு இன்று முதல் அனுமதிக்கப்படாது. அதோடு, ஏற்கெனவே இத்தகைய டாட்டூக்கள் போட்டிருக்கும் அதிகாரிகள் எளிதில் அடையாளம் காணக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் இந்த உத்தரவைப் பெற்ற 15 நாள்களுக்குள் அந்த டாட்டூக்களை நிரந்தரமாக அகற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், ஒடிசா காவல்துறையின் இத்தகைய உத்தரவு சில தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வரிசையில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தாஸ், “ஒரு போலீஸ் அதிகாரி தனது பெயரையோ அல்லது அவர் விரும்பும் கருப்பொருளையோ டாட்டூவாகப் போட்டுக்கொண்டால், மூத்த அதிகாரிகள் அதை ஆட்சேபிக்கக்கூடாது. ஒரு அதிகாரியின் நடத்தை என்பது அவரின் கடமையை வைத்து மதிப்பிடப்பட வேண்டுமே தவிர, அவரது டாட்டூவை வைத்து அல்ல, எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை

மாநில உயர் நீதிமன்றம், முதல்வர் இல்லம், ராஜ் பவன், தலைமைச் செயலகம், சட்டமன்றம் போன்ற முக்கிய இடங்களில் சிறப்பு பாதுகாப்பு பட்டாலியன் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், சமீபகால நிகழ்ச்சியில் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு பட்டாலியன் அதிகாரிகள் டாட்டூ போட்டிருப்பதைக் கண்ட சில காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக குற்றம்சாட்டியதையடுத்து இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.