மும்பை குடியிருப்புகள், கைவிடப்பட்ட தொழிற்சாலைகளில் போதைப் பொருள் தயாரிப்பு! – போலீஸார் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அங்கிருந்து மும்பைக்கு வரக்கூடிய சரஸ் என சொல்லப்படும் போதைப்பொருள் தடைபட்டுள்ளது. இதனால் மும்பையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். அந்த வெற்றிடத்தை போக்க எம்.டி என்ற மலிவு விலை போதைப்பொருள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.

எம்.டி.போதைப்பொருள் தயாரிப்பது மிகவும் எளிது, ஒரு சிறிய அறையில் அதனை தயாரித்துவிட முடியும் என்கிறார்கள். இதனால் எம்.டி போதைப்பொருள் மகாராஷ்டிரா தயாரிப்பு முழுக்க விரிவடைந்துள்ளது. குறிப்பாக மும்பையில் குடியிருப்பு பகுதிக்குள் இந்த வகை போதைப்பொருள் அதிக அளவில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோலாப்பூரில் கைதானவர்கள்

முதன் முதலில் 2016-ம் ஆண்டு சோலாப்பூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 2000 கோடி மதிப்புள்ள எபெட்ரின் என்ற பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ரசாயானத்தில் சில பொருட்களை சேர்த்தால் உடனே எம்.டி.போதைப்பொருள் தயாரித்துவிட முடியும். கைவிடப்பட்ட தொழிற்சாலைகளில் இந்த போதைப்பொருள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் தானே, பால்கர், புனே, சாங்கிலி மாவட்டத்தில் உள்ள பாழடைந்த அல்லது கைவிடப்பட்ட தொழிற்சாலையில் இந்த வகைப்போதைப்பொருளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இந்த வகைப்போதைப்பொருள் மார்க்கெட்டில் மிகவும் எளிதாக கிடைக்கிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு புனே, சாங்கிலி மற்றும் டெல்லியில் மகாராஷ்டிரா போலீஸார் ரெய்டு நடத்தி 1800 கிலோ எம்.டி போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவை மகாராஷ்டிராவின் குர்கும்ப் எம்.ஐ.டி.சி. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது. இதில் புனேயில் மட்டும் 1100 கிலோ பிடிபட்டுள்ளது. மும்பை போலீஸார் கடந்த மாதம் சாங்கிலியில் ரெய்டு நடத்தி 126 கிலோ எம்.டி போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை மீராரோட்டில் வசிக்கும் பிரவின் ஷிண்டேதான் கடந்த 4 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. சாங்கிலியில் தயாரித்து மும்பை முழுவதும் சப்ளை செய்து வந்துள்ளார்.

போதைப் பொருள்

பிரவின் ஷிண்டே வாரணாசியில் எம்.டி போதைப்பொருள் தயாரிக்க கற்றுக்கொண்டு வந்து சாங்கிலியில் தொழிற்சாலை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் வியாபாரிகள் மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகளை வாடகைக்கு எடுத்து இது போன்ற சட்டவிரோத வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். வாடகையும் அதிக அளவில் கொடுப்பதால் கம்பெனி உரிமையாளர்கள் உள்ளே என்ன நடக்கிறது என்பது குறித்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் எம்.டி போதைப்பொருள் மும்பையில் மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்பு பகுதியிலும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காந்திவலியில் ஆயுர்வேத டாக்டர் நூர் அலம் என்பவர் தனது சொந்த வீட்டிற்குள் ஆய்வுக்கூடம் அமைத்து அதில் எம்.டி போதைப்பொருளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதோடு கடந்த டிசம்பர் மாதம் மும்பை அருகில் இருக்கும் கொபொலி பண்ணை வீட்டில் எம்.டி. போதைப்பொருள் தயாரித்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று வெப் சீரியஸ் பார்த்து பால்கர் மாவட்ட கிராமத்தில் எம்.டி. போதைப்பொருள் தயாரித்த சமீர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தேவையான பொருட்களை சீனாவில் இருந்து வாங்கியது தெரிய வந்தது. 2021ம் ஆண்டு பர்வேஸ் கான் என்பவர் மும்பை டோங்கிரியில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள தனது வீட்டில் இதனை தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் எம்.டி போதைப்பொருள் தயாரிப்பு விரிவடைந்திருக்கிறது. இதையடுத்து அதனை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் என்ன தயாரிக்கப்படுகிறது, எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்ற விபரத்தை போலீஸார் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.