டெல்லி அணி வெற்றி… புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே முன்னேற்றம்… லக்னோவின் சாதனை தகர்ப்பு!

IPL 2024 LSG vs DC Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று லக்னோ எக்னா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் காயம் காரணமாக மயங்க் யாதவ் விளையாடவில்லை. 

தொடர்ந்து, லக்னோ அணிக்கு குவின்டன் டீ காக், ராகுல் நல்ல பார்டனர்ஷிப் அளித்தாலும் டீ காக் 13 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கம் போல், படிக்கல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளேவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை எடுத்தது. 

காப்பாற்றிய பதோனி

ஆனால் பவர்பிளேவுக்கு பின்னர் அந்த அணியை குல்தீப் யாதவ் புரட்டி எடுத்தார். ஸ்டாய்னிஸ் 8, பூரான் 0 என அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். அதேபோல், 9வது ஓவரில் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடாவும் 10 ரன்களில் வெளியேறினார். குர்னால் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழக்க 13 ஓவர்களில் லக்னோ 7 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

களத்தில் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் லோவர் மிடில் ஆர்டரில் விளையாடினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இவர்கள் கடைசி 7 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் 73 ரன்களை குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. ஆயுஷ் பதோனி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்களை எடுத்தார். டெல்லி அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2, இஷாந்த், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 

குல்தீப் யாதவ் ஆட்டநாயகன்

168 ரன்கள் என்ற இலக்குடன் கிளம்பிய டெல்லிக்கு சுமாரான தொடக்கம் கிடைத்தது. வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழக்க பிருத்வி ஷா மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்  ஆகியோர் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடினர். 6 ஓவர்கள் முடிவில் டெல்லி 62 ரன்களை அடித்திருந்தது. தொடர்ந்து பிருத்வி ஷா 32 ரன்களை அடித்தார். இதையடுத்து, ஜாக் உடன் ரிஷப் பந்த் களமிறங்கி ஆட்டம் காண்பித்தார். 

Victory in Lucknow for the @DelhiCapitals

A successful chase power them to their second win of the season as they win by wickets!

Scorecard https://t.co/0W0hHHG2sq#TATAIPL | #LSGvDC pic.twitter.com/6R7an9Cy8g

— IndianPremierLeague (@IPL) April 12, 2024

போட்டி நிறைவடையும் தருவாயில் ஜேக் 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 55 ரன்களை எடுத்தும், ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்து 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஸ்டப்ஸ், ஷாப் ஹோப் ஆகியோர் ஆட்டத்தை முடித்துவைத்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

சிஎஸ்கே முன்னேற்றம்

புள்ளிப்பட்டியலில் லக்னோ அணியின் நெட் ரன்ரேட் குறைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ 4வது இடத்தில் உள்ளது. டெல்லி 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.