Gold: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.54,000-த்தை தாண்டியது…விரைவில் ரூ.70,000-த்தை தொடுமா?!

தங்கம் விலை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் உயர்ந்துக்கொண்டே வருகிறது. இன்று தங்கம் விலை ரூ.54,000-த்தை தாண்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி வரை ரூ.5, ரூ.10 என ஏறிக்கொண்டும், இறங்கிக்கொண்டு இருந்த தங்கம் விலை, அந்த தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது.

Gold: ஒரு பவுன் ரூ.54,000-த்தை தாண்டியது…

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,725-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.53,800-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,400-க்கும் விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் இன்று ரூ.90-ஐ தொட்டுவிட்டது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை ஆனது.

தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா? என்று கேள்விக்கு, “உலக நாடுகளில் நடக்கும் தேர்தல்கள், சர்வதேச நாடுகளின் போர்கள், அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதம், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்திலேயே முதலீடு செய்து வருவது போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம். தங்கம் விலை விரைவில் ரூ.70,000-த்தை தொடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தங்கம் விலை உயர்வு பற்றி உங்கள் கருத்து என்ன மக்களே…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.