ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?

பிறப்புச் சான்றிதழ்

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். தமிழக அரசின் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு பிறப்பும் 14 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்து வாங்கிய சான்றிதழ்கள் நீங்கள் ஒருவேளை தொலைத்து விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். 

கட்டணமில்லா சான்றிதழ்

இப்போது மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தில், பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்கள் பெறுவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிறப்பு, இறப்பு அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக பதிவேற்றம் செய்து தங்களுக்கான பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்நிலையில், பிறப்பு சான்றிதழ் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உங்களுடைய குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை ஒரு பைசா செலவில்லாமல் நீங்களே எளிதாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி? 

பிறப்புச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன. அதன்படி, சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள இணைப்பின் வழியாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பின் வழியாகவும் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னை தவிர மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய.. பேரூராட்சிகள் இயக்ககத்தின் htpps://www.etwnpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பு பக்கத்திற்கு சென்று திரையில் தோன்றும் பிறப்பு சான்றிதழ் தேடுதல்(Search) என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

தமிழில் பிறப்புச் சான்றிதழ்

பின்னர், பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதலிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து சான்றிதழ் தமிழில் வேண்டும் என்றால் சான்றிதழ் வகை என்பதில் தமிழை கிளிக் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் சான்றிதழ் வகையில் ஆங்கிலம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  பின்னர், அனைத்து விவரங்களையும் சரியாகப் பதிவு செய்த பின்னர் Generate என்பதை கிளிக் செய்தால் பிறப்பு சான்றிதழ் விவரங்கள் திரையில் தோன்றும். அடுத்ததாக பிரிண்ட்(PRINT) என்பதை கிளிக் செய்து பிறப்பு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.