Ola: பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர்- யாருமே எடுக்காத முடிவில் ஓலா! 1 ஸ்கூட்டர் விலையில் இப்போ 2 வாங்கலாமா?

தடாலென விலை குறைப்பை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறது ஓலா ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம்.

ஆம், இப்போது இந்தியாவில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இத்தனை கம்மியான விலையில் வாங்க வேண்டுமென்றால், வேறு எங்கேயும் போக முடியாது. ஓலா ஷோரூமுக்குத்தான் போகணும்! 

இல்லையா பின்னே… ஓலா தனது S1 X சீரிஸின் அடிப்படை 2kW பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட்டின் விலையைத் தடாலடியாகக் குறைத்து அறிவித்திருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை இப்போது 69,999 ரூபாய்.

அதாவது 70,000 ரூபாய். இந்த விலைக்கு ஆம்பியர் ஸ்கூட்டர்களே வாங்க முடியாத நிலையில், ஓலா இப்போது சொல்லியடித்திருக்கிறது. இதற்கு முன்பு இது 80,000 ரூபாய் இருந்த நிலையில், 10,000 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். 

Ola

ஒரு வகையில் கார்களில் மாருதி போல, இ-ஸ்கூட்டர்களில் ஓலா என்று வைத்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு வெரைட்டியான ஆப்ஷன்ஸ் கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு – ஓலாவின் S1 X சீரிஸிலேயே 2kW, 3kW, 4kW என 3 பேட்டரி ஆப்ஷன் கொடுக்கிறார்கள். இதில் 3kW வேரியன்ட்டின் விலையும் குறைந்திருக்கிறது. இதன் தற்போதைய விலை ரூ.84,999 எக்ஸ் ஷோரூம். இதே சீரிஸில் டாப் எண்டான S1X 4kW பேட்டரி கொண்ட ஸ்கூட்டரின் விலை 1.10 லட்சத்தில் இருந்து 1.0 லட்சமாகக் குறைந்திருக்கிறது. 

இதைத் தாண்டி ஏகப்பட்ட வேரியன்ட்களையும் விற்பனை செய்து கொண்டிருக்கிறது ஓலா. S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1 X ப்ளஸ் என இன்னும் சில மாடல்கள் இருக்கின்றன. அவற்றின் மாறுதல் செய்யப்பட்ட விலையையும் அறிவித்திருக்கிறார்கள். Pro ரூ.1.30 லட்சம், Air ரூ.1.05 மற்றும் Plus ரூ.84,999 என இவை விற்பனை செய்யப்படுகின்றன. 

Ola scooter

திடீரென ஏன் இந்த விலைக் குறைப்பு? இந்திய அரசாங்கத்தால் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பெயர் EMPS (Electric Mobility Promotion Scheme). இந்த 2024, மார்ச் 31-ம் தேதியோடு நடைமுறையில் இருக்கும் FAME-II திட்டம் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்துதான் இந்தப் புதிய EMPS திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதை FAME-II திட்டத்தின் இரண்டாவது ஜென் என்றும் சொல்லலாம். EMPS திட்டத்தின்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1kW பேட்டரிக்கு, ரூ.5,000 ரூபாய் வரை மானியம் தர இருக்கிறது அரசு. இது முந்தைய திட்டத்தை விட அப்படியே பாதி குறைவான மானியம்தான்! (என்னங்க சார் உங்க சட்டம்?) 

ஓலாவை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஸ்கூட்டர்களின் விலையை ஏற்றிவிட்டார்கள்.

ஏத்தர் 3,000 ரூபாயில் இருந்து 16,000 ரூபாய் வரை விலையேற்றி இருக்கிறது. டிவிஎஸ் 3,000 -த்தில் இருந்து 6,000 வரை. ஹீரோ தன் விடா ஸ்கூட்டருக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 வரை விலையைக் கூட்டியிருக்கிறது. அட, பஜாஜ்! தனது சேட்டக் அர்பேன் ஸ்கூட்டருக்கு 8,000 ரூபாயும், ப்ரீமியம் ஸ்கூட்டருக்கு 12,000 ரூபாயும் விலை கூட்டி விட்டது. இந்த நிலையில் ஓலா மட்டும் விலைக் குறைப்பு செய்திருப்பதற்குப் பாராட்டுகள் தெரிவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இது தவிர தனது S1 ஸ்கூட்டர்களுக்கு 80,000 கிமீ அல்லது 8 ஆண்டுகள் வாரன்ட்டியும் கொடுக்கிறது ஓலா. இதனால், ஒரு S1 Pro மாடல் வாங்கும் விலையில், கிட்டத்தட்ட (எக்ஸ்ட்ரா 10,000 ரூபாய்தான்) இரண்டு S1X அடிப்படை வேரியன்ட் ஸ்கூட்டர்கள் வாங்கலாம்! 

Ola

அதேநேரம் – ஓலா இதனால் நஷ்டமாகலாம் என்றும் ஆட்டோமொபைல் அனலசிஸ்ட்கள் தெரிவிக்கிறார்கள். உங்ககிட்ட ஓலா ஸ்கூட்டர் இருந்தால், உங்க ஃபீட்பேக்கை கமென்ட்டில் சொல்லுங்களேன்! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.