Cooku With Comali 5: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2க்கு நோ; `CWC'க்கு எஸ்! குக்காக சுஜிதா இணைந்ததன் பின்னணி!

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான `குக்கு வித் கோமாளி’யின் ஐந்தாவது சீசன் மே முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த வாரமே தொடங்கிவிட்ட  நிலையில், இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை தயாரித்து வந்தவர்களிடமிருந்து நிகழ்ச்சி கை மாறியிருப்பதாலும், வெங்கடேஷ் பட் – தாமு கூட்டணி பிரிந்து பட்டுக்குப் பதில் மாதம்பட்டி ரங்கராஜ் இனைந்திருப்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த சீசன். வெங்கடேஷ் பட் தனியாக வேறொரு சேனலின் நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுவதால் விஜய் டிவி தரப்பில் இந்த சீசனை வழக்கத்தை விடக் கூடுதல் பிரமாண்டத்துடன் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

CWC 5

சரி, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள்?

விகடன் தளத்தில் ஏற்கெனவே பட்டியல் வெளியிட்டிருந்தோம். குக்குகளாக ஶ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலரும் கோமாளிகளாக ஷப்னம், ராமர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட சிலரும் கலந்துகொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இன்னொரு போட்டியாளர் குறித்தத் தகவலும் எக்ஸ்க்ளூசிவாக நமக்குக் கிடைத்துள்ளது. ஆம், நிகழ்ச்சியில் ‘குக்’காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த நடிகை சுஜிதாவும் பங்கேற்க இருப்பதாக நம்பகமான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.

ஷோக்களில் தங்கள் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறக்கிவிடுவது விஜய் டிவியில் வழக்கமானதுதான் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்குள் சுஜிதா வந்திருப்பதை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சக ஆர்ட்டிஸ்டுகள். சமீபமாக சேனல் இவர் மீது வருத்ததிலிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் விஜய் டிவியின் பிரபல ஷோவுக்குள் இவர் நுழைந்தது குறித்துதான் இந்த விவாதம்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசன்மிகப் பெரிய ஹிட்டான நிலையில் சேனலுடன் இவருக்கு என்ன பிரச்னை? உள் விவகாரங்களை அறிந்த சிலரிடம் பேசினோம்.

சுஜிதா

“சின்னத்திரையில் நீண்ட அனுபவம் கொண்ட சுஜிதா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசன்ல முக்கியமான கேரக்டர்ல கமிட் ஆனாங்க. கதையே இவங்களை மையப்படுத்திப் பயணிக்கிற மாதிரிதான் போச்சு. இதுக்கு முன்னாடியும் பல ஹிட் சீரியல்களில் நடிச்சிருந்தாலும் இந்தத் தொடர் இவங்களுக்குத் தந்த வரவேற்பு பெரிசுதான். சீரியலால் இவங்களுக்கும் இவங்களால் சீரியலுக்கும் நல்ல பெயர் கிடைச்சது. தொடர்ந்து நல்ல ரேட்டிங் கிடைக்க, சுமார் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகிய சீரியல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது.

விஜய் டிவியைப் பொறுத்தவரை ஒரு சீரியல் ஹிட் ஆனால், அடுத்தடுத்து அதன் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் என ஒளிபரப்புவார்கள். ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சில தொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வரிசையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இரண்டாம் பாகத்தையும் ஒளிபரப்ப முடிவு செய்தார்கள். அப்போது முக்கிய கதாபாத்திரங்களில் முதல் சீசனில் நடித்த நடிகர் நடிகைகளே இருந்தால் நன்றாக இருக்குமென யோசித்து, அவர்களிடம் இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து நடிக்கக் கேட்ட போது தொடரின் முக்கியக் கதாபாத்திரமான சுஜிதா மறுத்துட்டாங்க.

சுஜிதா

தனிப்பட்ட காரணம்னு வெளியில சொன்னாலும், முதல் சீசன் போல அண்ணியா இல்லாமா வளர்ந்த பையன்களுக்கு அம்மாவா நடிக்கணும்கிறதாலேயே அவங்க மறுத்ததாப் பேசப்பட்டுச்சு. சேனல் வற்புறுத்திக் கேட்டும் கடைசி வரை சுஜிதா சம்மதிக்கவே இல்லை. அதனால சுஜிதாவுக்குப் பதில் நடிகை நிரோஷா கமிட் செய்யப்பட, இரண்டாவது சீசனும் தொடங்குச்சு.

இந்தச் சூழல்ல, இப்ப ‘குக்கு வித் கோமாளி’யில் அவங்க குக்கா வர்றதால பழைய கசப்புகள் எல்லாம் விலகிடுச்சுன்னு தெரிய வருது” என்கிறார்கள் இவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.