தஞ்சாவூர்: `பேச்சுவார்த்தை தோல்வி' – ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள இனாத்துக்கான்ப்பட்டி கிராமத்தில் மொத்தம் 150 வீடுகள் உள்ளன. சுமார் 650 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளம் விரிவாக்கம் செய்வதற்காக இனத்துக்கான்பட்டி கிராமத்தினரின் நிலத்தை 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கையக்கப்படுத்தியது. இதனால் தற்போது தீவுக்குள் இருப்பது போல் தவித்து வருகின்றனர்.

இனாத்துக்கான்ப்பட்டிகிராம மக்கள்

கிராமமக்கள் பயன்படுத்தி வந்த பாதை மறைக்கப்பட்டதால் சுற்றி செல்கின்ற வகையில் மாற்றுப்பாதை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பள்ளிக்கூடம், குடிநீர், சாலை, மினி பஸ், சுகாதார நிலையம், அஞ்சலக சேவை போன்ற அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி தராமல் படிப்படியாகக் குறைத்துவிட்டன என்பது நீண்ட கால குற்றச்சாட்டு.

தங்கள் கிராமத்துக்கு அருகிலேயே மாற்று இடம் ஒதுக்கி தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை இக்கிராம மக்கள் உயர் அலுவலர்களிடம் முன் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை தொடர்வது தான் துயரம். இந்நிலையில் இனாத்துக்கான்பட்டி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறி ஏப்ரல் 8ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு

இதைதொடர்ந்து தேர்தல் நாளான இன்று ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்ததுடன், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஆர்.டி.ஓ இலக்கியா கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்து கடிதம் வழங்கினார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத கிராமக்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறீர்கள், நாங்கள் ஓட்டு போடமாட்டோம் என திட்டவட்டமாக கூறி ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளை திரும்பி அனுப்பி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னையூர் கிராமத்தினர்

அதே போன்று, ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் நடைபாலம் கடந்த 20 ஆண்டுகளாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால் கிராமத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பாலத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து கணக்கன் தெருவை சேர்ந்த 175 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வாக்களிக்க வைப்பதற்கான முயற்சி எடுப்பதற்கு கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.