What to watch on Theatre & OTT: மீண்டும் `கில்லி', Finder, Civil War – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

வல்லவன் வகுத்ததடா (தமிழ்)

வல்லவன் வகுத்ததடா

விநாயக் துறை இயக்கத்தில் ரஜேஷ் பாலச்சந்திரன், ஸ்வாதி மீனாட்சி, ரெஜின் ரோஸ் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வல்லவன் வகுத்ததடா’. பணத்தைக் கொள்ளையடித்து செட்டிலாக வேண்டும் என்று நினைக்கும் கும்பல், தனது திட்டத்தை நிறைவேற்றியதா, அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Finder (தமிழ்)

Finder (தமிழ்)

வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் சார்லி, சென்ராயன், நிழல்கள் ரவி, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Finder’. செய்யாத கொலைக்காகச் சிறையில் மாட்டிக்கொள்ளும் தந்தையைக் காப்பாற்ற அவரது மகளும், மனைவியும் போராடுவதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரூபன் (தமிழ்)

ரூபன் (தமிழ்)

அய்யப்பன் இயக்கத்தில் விஜய் பிரசாத், காயத்ரி, சார்லி, ஆறுமுகம், கஞ்சா கருப்பு, ராஜா, இளங்கார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூபன்’. வனப்பகுதியில் நடக்கும் ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சிறகன் (தமிழ்)

சிறகன் (தமிழ்)

வெங்கடேஷ்வராஜ் இயக்கத்தில் கஜராஜ், ஜிவா ரவி, வினோத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிறகன்’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Never Escape (தமிழ்)

Never Escape (தமிழ்)

அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், ஆதி பிரித்வி, ஹர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Never Escape’. சீரியல் கில்லர் பற்றிய க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கில்லி (தமிழ்)

கில்லி

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கில்லி’ திரைப்படம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் இந்த வாரம் ரீ-ரிலீஸாகியிருக்கிறது.

Jai Ganesh (மலையாளம்)

Jai Ganesh (மலையாளம்)

ரஞ்சித் ஷங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன், மஹிமா, தேவகி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Jai Ganesh’. நடக்க முடியாத மாற்றுத் திறனாளியாக இருக்கும் கதாநாயகனின் காதல், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Do aur do pyaar (இந்தி)

Do aur do pyaar

ஶ்ரீஷா குஹா தகுர்தா இயக்கத்தில் வித்யா பாலன், பிரதிக் காந்தி, இலியான உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘Do aur do pyaar’. இரண்டு காதல் ஜோடிகளின் அழகான காதல் கதையான இது ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Love, Sex Aur Dhokha -2 (இந்தி)

Love, Sex Aur Dhokha -2

திபாகர் பேனர்ஜி இயக்கத்தில் நிமிரிட் ஆலுவலியா, ஸ்வரூப கோஷ், உர்ஃபி ஜாவத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love, Sex aur Dhokha -2’. இது இதே திபாகர் பேனர்ஜி இயக்கிய ‘Love, Sex aur Dhokha’ படத்தின் இரண்டாவது பாகம். இன்றைய மாடர்ன் காதல் உறவுகளின் சிக்கல்களைப் பற்றிய திரைப்படமான இது ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Appu (ஆங்கிலம்)

Appu (ஆங்கிலம்)

புரோசெஞ்சித் கங்குலி, அஜய் வேலு, அர்சிஸ்மேன் கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன், அட்வென்சர் அனிமேஷன் திரைப்படம் ‘Appu’. வேட்டைக்காரனிடம் மாட்டிக்கொண்டு தொலைந்துபோகும் தந்தை யானையைக் காப்பாற்றப் போராடும் குட்டி யானை மற்றும் அதன் நண்பர்களின் சாகசங்கள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Civil War (ஆங்கிலம்)

Civil War

அலக்ஸ் கர்லாண்ட் இயக்கத்தில் கிறிஸ்டன் டன்ஸ்ட், வாங்னர் மவுரா, கைலி ஸ்பென்னி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Civil War’. நாட்டைக் காப்பாற்றப் போராடும் போர்க்களத்தில் ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்களின் தீவிரப் பணியைப் பற்றிச் சொல்லும் திரைப்படமான இது ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

பொன் ஒன்று கண்டேன் (தமிழ்) – Jio Cinema

பொன் ஒன்று கண்டேன்

பிரியா இயக்கத்தில் அஷோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன் ஒன்று கண்டேன்’. இரண்டு நெருங்கிய நண்பர்கள் ஒரு பெண்ணைக் காதலித்துச் சண்டை போட்டுக்கொள்வதுதான் இதன் கதைக்களம். நட்பு, காதல், திருமண உறவு ஆகிவற்றை காமெடியாகச் சொல்லும் முக்கோணக் காதல் இத்திரைப்படமான இது ஏப்ரல் 14-ம் தேதி ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

My Dear Donga (தமிழ்) – Aha

My Dear Donga

பி.எஸ். சர்வக்னா குமார் இயக்கத்தில் அபிநவ், திவ்யா ஶ்ரீபடா, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘My Dear Donga’. காதல், காமெடி திரைப்படமான இது ஏப்ரல் 19ம் தேதி ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Silence 2: The Night Owl Bar Shootout – Zee5

Silence 2: The Night Owl Bar Shootout – Zee5

அபன் பருச்சா டியோன்ஸ் இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், பிராச்சி தேசாய், ஷ்ருதி பாப்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Silence 2: The Night Owl Bar Shootout’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 19ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Rebel Moon 2: The Scargiver (ஆங்கிலம்) – Netflix

Rebel Moon 2: The Scargiver

ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் ஷோபியா பவுட்டல்லா, அந்தோனி ஹோப்கின்ஸ், எட் ஷெக்ரைன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rebel Moon 2’. ஆக்‌ஷன் அட்வன்சர் ஹாலிவுட் திரைப்படமான இது, கடந்த ஆண்டு வெளியான ‘Rebel Moon’ படத்தின் இரண்டாம் பாகம். இது ஏப்ரல் 19ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

The Sympathizer (ஆங்கிலம்) – Jio Cinema

The Sympathizer

டான் மெக்கலர், பார்க் சான் வூக் ஆகியோர் இயக்கத்தில் ஹோ வுகண்டே. ராபர்ட் டவுனி ஜூனியர், டோன் லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Sympathizer’. வியட்நாம் போர் முடிந்த பிறகு நடக்கும் கதையில், அங்கிருக்கும் சூழல், அகதிகளின் நிலை எனப் போருக்குப் பிறகான நாட்டின் சூழலை டார்க் காமெடியாகப் பேசும் இந்த வெப்சீரிஸ் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Tourist 2 – Lionsgate Play

The Tourist 2

ஹாரி வில்லியம்ஸ், ஜாக் வில்லியம்ஸ் ஆகியோர் இயக்கத்தில் ஜாமி டோர்னன், டேலியலி மெக்டோனால்ட், கிரிக் லார்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Tourist சீசன் 2’. விபத்தில் தன் நினைவுகளை இழந்த கதாநாயகன், சுற்றுப்பயணம் மேற்கொள்வது மூலம் குணமாகிறாரா என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chief Detective 1958

Chief Detective 1958

கிம் சங் ஹூன் இயக்கத்தில் லி ஜெஹூன், ஷியீ ஈயூன் ஷூ, லீ டாங்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Chief Detective 1958’. துப்பறிவதில் சிறந்து விளங்கும் இளைஞன், தனது நண்பர்களுடன் சவாலானக் குற்றங்களைத் துப்பறிவதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

சைரன் (தமிழ்) – Disney + Hotstar

சைரன் (தமிழ்)

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரன்’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ரணம் (தமிழ்) – Amazon Prime Video

ரணம் (தமிழ்) – Amazon Prime Video

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணம்’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது, ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

யாவரும் வல்லவரே (தமிழ்) – Aha

யாவரும் வல்லவரே (தமிழ்) – Aha

ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், ரித்விகா, ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாவரும் வல்லவரே’. ராணுவத்தில் இறந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள், சாதி அரசியல் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

All India Rank (இந்தி)

All India Rank (இந்தி)

வருண் க்ரோவர் இயக்கத்தில் ஷஷி பூஷன், ஷீபா சத்தா, அனன்யா பிராட்டா சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘All India Rank’. ஐஐடி போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்று படிக்கும் 17 வயது இளைஞனின் கதை இது. இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Dream Scenario (ஆங்கிலம்) – Lionsgate Play

Dream Scenario

கிறிஸ்டோபர் போர்க்லி இயக்கத்தில் நிக்கோலஸ் கேஜ், ஜூலியான் நிக்கல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dream Scenario’. காமெடி, ஃபேன்டஸி, ஹாரர் திரைப்படமான இது ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.