இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!

இந்திய கார் மார்க்கெட் இப்போது எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான அடிப்படை கட்டமைப்புகளே மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய சூழலில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் தான். அதனை கார் நிறுவனங்கள் இப்போது நாடு முழுவதும் அமைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், அவை எங்கு இருக்கின்றன என்பதை தேடிக் கண்டுபிடிப்பது இன்னொரு சவாலாக இருக்கிறது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கூகுள் மேப்ஸ். அதாவது கூகுள் மேப்ஸ் மூலம் இனி எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் சார்ஜிங் ஸ்டேஷனையும் அறிந்து கொள்ள முடியும். இது குறித்து கூகுள் மேப்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் விரைவில் உலகம் முழுவதும் அமைந்திருக்கும் அருகில் உள்ள EV சார்ஜிங் ஸ்டேஷன்களை டிஸ்ப்ளே செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் விரைவில் வரக்கூடிய செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் என்றும் கூறியுள்ளது. இனி கஸ்டமர்கள் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய முழு விவரங்களையும் கூகுள் மேப்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய ரிவ்யூக்கள், சார்ஜிங் ஸ்டேஷனை அடைவதற்கான படிப்படியான வழிகாட்டுதல் போன்றவற்றையும் இந்த அம்சம் வழங்க உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே google.com/travel -க்கு EV ஃபில்டர் என்ற மேம்பட்ட ஒரு அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி EV கஸ்டமர்கள் இன்-பில்ட் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை எளிதாக அடையாளம் காணலாம். இந்த அம்சத்திற்கு எலக்ட்ரிக் வாகன கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஏனெனில் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அதிக பாதுகாப்புடன் தைரியமாக எலக்ட்ரிக் வாகனங்களை ஓட்டுவதற்கான தைரியத்தை இந்த அம்சம் அளிக்கிறது. சார்ஜிங் ஸ்டேஷன் எங்கு இருக்கிறது என்ற தகவல் அறிந்திடாமல் வாகனம் ஓட்டுவது ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறது. கூகுள் மேப்ஸ் வெளியிட்டுள்ள இந்த அம்சம் நிச்சயமாக கஸ்டமர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்தால் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.