இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாக இவர் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஹர்பஜன் சிங் புதிய கேப்டனாக கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் அல்லது ரிஷப் பந்த் ஆகியோரின் பெயரை குறிப்பிடவில்லை.  மாறாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்தது.  இதனால் ஹர்பஜன் அடுத்ததாக இந்தியாவை யார் வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 

மும்பை அணி தரப்பில் திலக் வர்மா 65 ரன்களும், நேஹால் வதேராவின் 49 ரன்களும் அடித்தனர்.  இதனை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் அணி 180 ரன்களை 8 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.  யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் அடித்து இருந்தார்.  இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹர்பஜன் சிங் ‘ஃபார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது’ என்று ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வாலை பாராட்டியுள்ளார்.  

Yashasvi Jaiswal’s knock is a proof of class is permanent . Form is temporary @ybj_19 and there shouldn’t be any debate about Keepar batsman . @IamSanjuSamson should walks in to the Indian team for T20 worldcup and also groomed as a next T20 captain for india after rohit . koi…

— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 22, 2024

மேலும் கேப்டன் சஞ்சு சாம்சனை அதிகமாக பாராட்டியுள்ளார். ரோஹித் சர்மாவிற்கு பிறகு சஞ்சு சாம்சன் அடுத்த கேப்டனாக வர வேண்டும் என்று கூறியுள்ளார்.  டி20 உலகக் கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெறுவார் என்றும், ரோஹித்க்கு அடுத்து இந்தியாவுக்கு அடுத்த டி20 கேப்டனாக வர வேண்டும் என்றும் கூறினார். “யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இந்த ஆட்டம் அவரது திறமைக்கு சான்றாகும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைப் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து, ரோஹித்துக்குப் பிறகு இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாகவும் வர வேண்டும்” என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் ஒரு நல்ல தலைவர், அவர் விஷயங்களை எளிமையாக வைத்து, பின்னால் இருந்து செயல்படுகிறார். அவரது கேப்டன்சியின் கீழ், ராஜஸ்தான் அணி 2023ல் சிறப்பாக விளையாடினாலும் பைனலுக்கு வர தவறியது. இந்த ஆண்டு தற்போதே ராஜஸ்தான் அணி பிளேஆஃப்களில் தங்களின் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மற்றொரு முறை இறுதிப் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது என்று ஹர்பஜன் மேலும் தெரிவித்தார். மும்பை அணிக்கு எதிராக தனது வீரர்கள் சிறப்பாக விளையாடியதற்காக சஞ்சு சாம்சன் அவர்களை பாராட்டினார். “கிரெடிட் எல்லா வீரர்களுக்கும் போக வேண்டும். பவர்பிளேயில் நன்றாக விளையாடினோம். நடுவில் மும்பை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனால் கடைசியில் சில விக்கெட்களை எடுத்ததால் போட்டி எங்கள் பக்கம் திரும்பியது.  இரவில் குளிர் அதிகமாகி, இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது நன்றாக இருந்தது” என்று சஞ்சு சாம்சன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.