காணிகளை விடுவிப்பதில் உரிமை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லை. – பிரதமர் தினேஷ் குணவர்தன

உரிமை அவ்வாறே இருக்கும் நிலையில் பயிர்ச்செய்கைக்கான அதிகாரத்தை வழங்க அரசு முடிவு செய்தது…

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில், நேற்று (2024.04.22) தெஹியோவிட்ட பிரதேச செயலகத்தில், முட்டை அடைகாப்பகங்களை வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

மக்கள் சீனக் குடியரசிடமிருந்து கிடைத்த இந்த உதவி நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும், நாங்கள் பல விசேட திட்டங்களுக்கு செல்ல முடிந்துள்ளது. உள்ளூராட்சி, பொது நிர்வாகம் பிரதேச செயலகங்களை ஒருங்கிணைக்கும் இலக்குமயப்பட்ட அபிவிருத்தி முயற்சியில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

உலகப் பொருளாதாரத்தில் பல நாடுகளில் இதுபோன்ற நெருக்கடிகளை நாம் பார்த்திருக்கிறோம். உலகப் பொருளாதாரத்தின் வெவ்வேறு காலங்களில், பல்வேறு நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. அந்த பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில், மக்கள் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர். வருமான ஆதாரங்களில் சிக்கல்கள் ஏற்படும். வருமான ஆதாரங்களில் உள்ள சிக்கல்களால், அரச ஊழியர்கள் பல்வேறு பொருளாதார நிலைமைகளுக்கு உள்ளாகின்றனர். கிரேக்க அரசாங்கம் தனது பொருளாதார வருமான ஆதாரங்களை இழக்கத் தொடங்கியபோது, அரசாங்கத்தில் பணிபுரியும் நாற்பது வீதமானவர்களை தங்கள் வேலையை விட்டு முதலில் நீக்கத் தொடங்கினர். செல்வந்த நாடுகளில் ஐரோப்பாவும் இந்த அழுத்தத்தை எதிர்கொள்கிறது. அரச உத்தியோகத்தர்களை நீக்குமாறு சர்வதேச அமைப்பு எங்களிடம் கூறியும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

மக்களின் பாதுகாப்பிற்காக பாடுபடுவதன் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிகளில் ஈடுவோம் என அவர்களிடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று கோரளைகளையும் சேர்ந்த மக்கள் எமது கிராமிய உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கியமான அக்கறை கொண்டுள்ளனர். அதை மேம்படுத்த, மாவட்ட அபிவிருத்தித் தலைவர்கள், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் செயற்பட வேண்டும். மலைநாட்டு மக்களுக்கு விசேட பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசம் மலைநாட்டு மக்களுக்கு சொந்தமானது. மூன்று கோரளைகள் பிரிவில் கிராமம் கிராமமாகப் பிரிந்து அதைக் கோரும் தேவை குறிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும். பண்டாரநாயக்கா அம்மையார் வெளிநாட்டு தோட்டங்களை அரசாங்க நிலங்களாக மக்களுக்கு சொந்தமாக்கினார். சுதேச தனியார் உரிமையாளர்களின் மேலதிக நிலங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டது. அந்தச் சட்டம் முடிவுறுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகளாகின்றன. ஆனால் எதிர்பார்த்த இலக்குகள் எட்டப்படவில்லை.

அதுதொடர்பில் விசேடமாக கலந்துரையாடி அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய பயிர்ச்செய்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி அரசாங்கத்தின் பாரிய தோட்டங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் விவசாயம் செய்யப்படாத பல ஏக்கர் காணிகளை கிராம உத்தியோகத்தர்களும் பிரதேச செயலாளர்களும் தொடர்பு கொண்டு அந்த காணிகளை புதிதாக அபிவிருத்திக்காக விடுவிக்கின்றனர். இங்கு உரிமை பற்றிய பிரச்சனை இல்லை, பயிர்ச்செய்கை பற்றிய பிரச்சனையே உள்ளது. உரிமை அவ்வாறு இருக்கும் நிலையிலேயே விவசாயம் செய்ய அதிகாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பிரதேசத்திற்கு பிரதேசம், சில கிராமங்கள் உணவுப் பயிர்ச்செய்கைக்கும், சில கிராமங்கள் ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக்கும் திரும்ப வாய்ப்பு உள்ளது. கிராமம் கிராமமாக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாடு கவனம் செலுத்துவது இந்த நேரத்தில் அவசியம்.

இந்த நீர்நிலை மலைகளில் இருந்து கீழ்இறங்கி பெரிய ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது. இப்படிப் பயணிக்கும் முதல் இடைத் தொகுதி இந்த மூன்று கோரளைகளில் தான் உள்ளது. எமது தேசம் எவ்வளவு வளம் நிறைந்தது என்று பாருங்கள். வள அபிவிருத்தி மற்றும் சிறந்த முகாமைத்துவத்துடன் மிகவும் கவர்ச்சிகரமான அபிவிருத்தித் திட்டத்தைப் பின்பற்றுவதற்கும் உங்கள் கருத்துக்களை உள்வாங்கி செயற்படக்கூடிய ஒரு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க, ராஜிகா விக்ரமசிங்க, யதாமினி குணவர்தன, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.