Ghilli: “ரிலீஸ் அப்போ மிஸ்ஸானது, ரீ-ரிலீஸ்ல நடந்துருச்சு..!" – நாகேந்திர பிரசாத்

20 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகி இருக்கும் ‘கில்லி’, தியேட்டர்களுக்கு ஆடியன்ஸை படையெடுக்க வைத்திருக்கிறது. இந்த ரீ-ரிலீஸ் அனுபவம் குறித்தும் ‘கில்லி’ படத்தில் நடித்ததைப் பற்றியும் நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் பேசினோம். 

‘கில்லி’ படத்தை இப்போ தியேட்டரில் பார்த்தீங்களா..?

கில்லி

“முதல் நாளே பார்த்துட்டேன். புதுசா ரிலீஸான படம் மாதிரி கொண்டாடுறாங்க. நான் போன தியேட்டர் திருவிழா மாதிரி இருந்துச்சு. அந்தப் படத்தில் நடிச்ச எனக்கே படத்தை 20 வருஷம் கழிச்சி பார்க்கிறப்போ ரொம்ப ஃப்ரஷ்ஷா இருந்துச்சு. மக்களுக்கு சொல்லவா வேணும். 2004ல ‘கில்லி’ படம் ரிலீஸானப்போ நான் சென்னையிலேயே இல்லை. என்னால அப்போ ரசிகர்களோட கொண்டாடட்டத்தைப் பார்க்க முடியலை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்துச்சு. இப்போ 20 வருஷம் கழிச்சி எனக்கு இருந்த குறை போயிடுச்சு. இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. இந்த அனுபவத்தை எனக்கு கொடுத்த இயக்குநர் தரணி சாருக்கு நான் நன்றிகள் சொல்லிட்டே இருப்பேன்.”

‘கில்லி’ படத்துல உங்களுக்கு டான்ஸ், ஃபைட், நடிப்புனு எல்லாத்துலயும் ஸ்கோப் இருக்கும். உங்களுக்கு இந்த கேரக்டர் எவ்வளவு முக்கியமானதாக இருந்துச்சு..?

“தரணி சார் என் கேரக்டருக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார். எனக்கு மட்டுமில்ல; அந்தப் படத்தில் நடிச்ச எல்லா நடிகர்களோட முழு திறமையையும் படத்திற்குள் கொண்டு வரணும்னு மெனக்கெட்டார். எனக்கு சண்டைக்காட்சிகளில் நடிக்கிறது பிடிக்கும். அதுனாலேயே எனக்கு சில ஸ்டண்ட் ஷாட்ஸ் வச்சார். அதை நான் பண்றதைப் பார்த்த விஜய்யே, ‘பிரசாத் ரொம்ப நல்லா பண்றியே’னு சொன்னார். அது இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஞாபகத்தில் இருக்கு. அதுமட்டுமில்லாமல், 7 ஏக்கரில் மகாபலிபுரத்தில் தான் செட் போட்டிருந்தாங்க. அதில் தான் 3 மாசம் எல்லாரும் ஒன்னா இருந்தோம். நாங்க எல்லாரும் ஒரே குடும்பமாக இருந்ததை என்னைக்குமே மறக்க முடியாது.”

விமல், ‘ஆடுகளம்’ முருகதாஸ், அப்புக்குட்டினு ‘கில்லி’ படத்துல சின்ன, சின்ன ரோலில் நடிச்சவங்க இப்போ நல்லா தெரிஞ்ச நடிகர்களாக இருக்காங்க. அதை பார்க்கும் போது எப்படி இருக்கு..?

கில்லி டீம்

“நான் ‘கில்லி’ படம் ரிலீஸ் ஆனதுல இருந்து கொஞ்ச வருஷம் இந்தியாவிலேயே இல்லை. டான்ஸ் சம்பந்தமாக படிக்கணும்னு வெளிநாட்டுக்குப் போயிட்டேன். வந்து பார்க்கும் போது விமல் ஹீரோவாகிட்டார். அவர் படங்களுக்கு தனியா ரசிகர்கள் இருக்காங்க. அதே மாதிரி, தாமு சார் அவரோட கரியரையே மாத்தி இப்போ ஸ்கூல் படிக்கிற பசங்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பீக்கரா இருக்கார். அதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு.”

‘கில்லி’ படத்துல செமி ஃபைனல்ல தோற்ற கபடி டீம் எப்படி ஃபைனல்ல விளையாடுச்சுனு இப்போதும் கேள்வி கேட்கிறாங்க. அது உங்களுக்கு தோணுச்சா..?

கில்லி டீம்

“நாங்களுமே அந்த கேள்வியை தரணி சார்கிட்ட கேட்டோம். அதுக்கு, ‘ஃபைனலுக்கு போன ஒரு டீம்னால விளையாட முடியலை. அதுனால, உங்க டீம் ஃபைனல் விளையாட போகுது’னு சொல்லி சமாளிச்சாங்க. ஆனால், எல்லாருக்கும் அந்த மிஸ்டேக் தெரிஞ்சது. அதை அப்படியே ஜாலியா விட்டுட்டாங்க.”

‘கோட்’ படத்துல விஜய் – ராஜூ சுந்தரம் கூட்டணி மறுபடியும் சேர்ந்திருக்கு. ஒரு தம்பியாக உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு..?

கோட்

“அவங்க காம்போ எப்போதுமே ஹிட்டு தான். அவங்க ரெண்டு பேருக்கும் இடையில அப்படி ஒரு பாண்டிங் இருக்கும். விஜய் சாரோட கரியர் ஆரம்பத்தில் இருந்தே எங்க அண்ணன் கூட வொர்க் பண்ணிட்டு இருக்கார். அதுனால, எங்க அண்ணனோட ஸ்டைல் விஜய் சார்கிட்ட அப்படியே தெரியும். விஜய் சாரோட டான்ஸுக்கு இப்போ ஒரு ஸ்டைல் இருக்குல. அந்த ஸ்டைலுக்கே ராஜூ அண்ணா தான் காரணம்னு தைரியமா சொல்லுவேன். டான்ஸ் மூவ்மென்ட்ல காமெடி பண்றது எல்லாமே ராஜூ அண்ணா ஸ்டைல் தான். அந்தளவுக்கு அவங்க பேரும் அவ்வளவு வொர்க் பண்ணியிருக்காங்க. இப்போ ‘கோட்’ படத்துல அந்த காம்போ மறுபடியும் சேர்ந்திருக்கு. கூடுதல் ஸ்பெஷலாக பிரபு தேவா அண்ணனும் அதுல சேர்ந்திருக்கார். அந்த பாட்டுல வந்த சின்ன டான்ஸ் பிட்டே பார்க்கிறதுக்கு அவ்வளவு எனர்ஜியாக இருக்கு. நிச்சயமாக முழு பாட்டும் வெறித்தனமாக இருக்கும்னு நம்புறேன்.”

‘கில்லி’ மாதிரி பிரபு தேவா நடிச்ச எந்த படத்தை ரீ-ரிலீஸ் பண்ணுனா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க..?

காதலன்

” ‘காதலன்’ படத்தை ரீ-ரிலீஸ் பண்ணுனா செமையா இருக்கும். ‘இந்து’ படத்தை ரிலீஸ் பண்ணுனாலும் நல்லா ஜாலியாக இருக்கும். ஆனால், ‘காதலன்’ல பிரபு அண்ணாவையும் தாண்டி ஷங்கர் சாரோட பிரமாண்டமும் சேர்ந்திருக்கிறனால, அந்தப் படத்தை இப்போ தியேட்டர்ல பார்த்தாலும் அதே மேஜிக் மறுபடியும் நடக்கும்னு நினைக்கிறேன்.”

திடீர்னு இயக்குநர் அவதாரம் எடுக்க என்ன காரணம்..?

புனித் ராஜ்குமார்

“எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்திக்கிட்டேன். தமிழில் ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணச்சொல்லி ஒரு வாய்ப்பு வந்துச்சு. அதில் ‘விஜய் சேதுபதி நடிச்ச கேரக்டரில் புனித் ராஜ்குமார் நடிச்சா நான் இதை பண்றேன்’னு சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டார். அதுனால, அப்பு அண்ணனுக்காக அந்த படத்துல பாட்டு, சண்டைனு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக சேர்ந்து பண்ணினேன். ஆனால், அது அவருக்கு கடைசி படமாக அமையும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. எனக்காக அந்தப் படத்தை ரொம்ப அழகா பண்ணிக்கொடுத்தார். அவரை என்னால் மறக்கவே முடியாது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.