CSK vs SRH: பவர்பிளேயில் தீக்சனா! சென்னை அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக மூன்று ஹோம் கேம்களில் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இது சென்னை அணியின் பிளே ஆப் கனவில் சற்று சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் மட்டுமே சொந்த போட்டிகள் இல்லாத இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் டெல்லி, ஹைதராபாத், லக்னோ ஆகிய இடங்களில் தோல்வியை சந்தித்தது. நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணி தற்போது 5வது இடத்தில் உள்ளது.  

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவர்களின் கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து உள்ளது.  சென்னை அணி சொந்த மண்ணில் தங்கள் ஃபார்மை மீண்டும் பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஹைதராபாத் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 100% வெற்றி சாதனை வைத்துள்ளனர் சென்னை அணி. ஆனால் இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது.  இந்த சீசனில் பேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்துள்ளன. பெங்களூரு அணி ஸ்பின்னர்களை கொண்டு SRH தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவை வெளியேற்றியது. இது அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது.

Whistles for this classic neighbourhood#CSKvSRH #WhistlePodu #Yellove pic.twitter.com/Eq9wYibS1q

— Chennai Super Kings (@ChennaiIPL) April 28, 2024

எனவே சென்னை அணியும் மொயின் அலி அல்லது தீக்சனாவை பவர்பிளேயில் பயன்படுத்துமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தீபக் சாஹர் பவர் பிளேயில் ரன்களை வாரி வழங்குவதால் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் விளையாடின. இதில் சென்னை அணி தோல்வி அடைந்து இருந்தது.  20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அபிஷேக் மற்றும் மார்க்ரம் சிறப்பாக விளையாடி ஹைதராபாத் அணியை வெற்றி பெற செய்தனர்.  சேப்பாக்கம் இந்த சீசனில் நான்கு போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களைக் கடந்துள்ளது. இதனால் இந்த போட்டியில் SRH-ன் அணுகுமுறைக்கு சவாலாக இருக்கலாம்.

உத்ததேச அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விகீ), தீபக் சாஹர், தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விகீ), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.