பொலிஸ் ஒழுக்காற்று நடவடிக்கைளை அமுல்படுத்தல் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிப்பு 

அதிகாரிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல், நிருவாக முரண்பாடுகளுக்கான தீர்வு மற்றும் சிபரசுகளை முன் வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுப்பதனால் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுகளில் ஏற்படும் தாமதம் போன்ற நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கு பொருத்தமான தீர்வைமுன் வைப்பதற்காக கிழக்கு மாகாண சுரேஷ்டர் பிரதிப்படைஷ்மா அதிபர் அஜித் ரோகின தலைமையில் இக்குழு  நியமிக்கப்பட்டது.

அதற்கிணங்க குழுவினால் சிபாரிசு செய்யப்படும் ஒழுக்க கோவையினை விரைவு படுத்தல், நிர்வாக சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் சிபாரிசுகளை முன் வைத்து தயாரிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கடந்த 26 ஆம் திகதி குழுவின் தலைவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து  ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.