60 வயதில் அழகிப் போட்டியில் வென்ற அலெஜாண்ட்ரா… வெற்றிக்கான காரணம் இதுதான்..! #MissUniverse

’மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டிக்கான, ஆஸ்திரேலியாவில் நடந்த தேர்வுச் சுற்றில் 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பிட்ட மாகாணத்துக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை (Miss Universe for the province of Buenos Aires), இத்தனை அதிக வயதில் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ். அர்ஜென்டினா நாட்டின் புவெனஸ் ஐரிஸ் மாகாண அளவில் நடைபெற்ற போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

Alejandra Marisa Rodriguez

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 18 முதல் 28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. இதனால், அழகிப் போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த விதிமுறை கடந்த ஆண்டு தளர்த்தப்பட்டு, வயது வரம்பு நீக்கப்பட்டது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்ணும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

இதனைத் தொடர்ந்து, அர்ஜென்டினாவின் தலைநகரில் நடைபெற்ற போட்டியில், 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் பட்டத்தை வென்றுள்ளார். இவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும்தான் இவரின் வெற்றிக்கான காரணம் என்று நடுவர்கள் கூறியுள்ளனர். போட்டியைக் காண வந்த பார்வையாளர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு இவருக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Miss Universe

அழகிப் போட்டியில் பங்கேற்ற அலெஜான்ட்ராவுக்கு வழக்கறிஞர், பத்திரிகையாளர் என இரு முகங்கள் உள்ளன. 60 வயதில் பட்டத்தை வென்றதன் மூலம், எந்த வயதிலும் உலக அழகி பட்டத்தை வெல்லலாம் என்ற நம்பிக்கையை இவர் விதைத்துள்ளார்.

பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அலெஜாண்ட்ரா, “அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களை உடல் அழகை மட்டுமன்றி, அவர்களின் பிற திறமைகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

Alejandra Marisa Rodriguez

அடுத்த மாதம் நடைபெறும் ‘மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினா’ (Miss Universe Argentina) போட்டியில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன். அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றால், வரும் செப்டம்பர் மாதம் மெக்ஸிகோவில் நடைபெறும் ‘சர்வதேச மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் அர்ஜென்டினா நாட்டின் பிரதிநிதியாகப் பங்கேற்க முடியும்” என்றார்.

லத்தீன் அமெரிக்க நாடான டொமினிக் குடியரசில் நடந்த போட்டியில் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.