Tamil News Live Today: குடும்பத்தினருடன் ஓய்வு… இன்று கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

இன்று கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் ஹாலிடே மோடில் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று கொடைக்கானல் செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அது கொடைக்கானல் பயணமாக மாற்றப்பட்டது.

மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து தங்கி முதல்வர் ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த சென்டிமென்ட் காரணமாகவும் முதல்வர் தற்போது கொடைக்கானல் செல்வதாக சொல்லப்படுகிறது. ஓய்வுக்காக முதல்வர் செல்வதால், இந்த பயணத்தில் கட்சியினர் சந்திக்க அனுமதி இல்லை என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.