கிழக்கு மாகாணத்தில் “உருமய” உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய  “உருமய” காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் குறித்து கிழக்கு மாகாண மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்  விதமாக கிழக்கு மாகாணத்தின் அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு (30) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அரச காணிகளின் சகல உரிமைகளையும் பெற்ற மக்களுக்கு நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் “உறுமய”  காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டத்தின்  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக

மாகாணக் காணி அலுவலகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அரச காணிகளில் சுவர்ணபூமி, இசுறு பூமி, ஜய பூமி, ரண் பூமி போன்ற அரச காணிகளின் உரிமைகளை அனுபவிக்கும் மக்களுக்கு அதன் பூரண உரித்தை   ” உருமய ” எனும் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

20 இலட்சம் விவசாயக் குடும்பங்களை உத்தேசிக்கப்பட்ட பயனாளிக் குடும்பங்கள் எனும் நோக்கத்துடன் அவர்கள் அனுபவிக்கப்படும் அரச காணிகளுக்காக சுதந்திரமான அளிப்புப் பத்திரத்தை வழங்குதலே  உருமய நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான இலக்காகும். 

1935 ஆம்  19 இலக்க காணி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் காணி இல்லாத விவசாய மக்களுக்காக விவசாய கைத்தொழில் மற்றும் குடியிருப்பு நோக்குடன் இது வரை 17 இலட்சம் அனுமதிப் பத்திரங்களும் 12 இலட்சம் அளிப்புப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த அரச காணி அளிப்புக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை பிரதேச காணி அலுவலகங்களில் ஒப்படைத்து,  இவ்வுறுமய காணி அளிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களை ஆர்வமூட்டுவதற்கான  வழிகாட்டல்களை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சந்திரா ஹேரத் வழங்கினார்.

ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர் நுவணி, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாகாண காணி அலுவலக அதிகாரிகள்  ஆகியோருடன் இத்தெளிவுபடுத்தல் நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சகல பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், காணி அலுவலர்கள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.