கோவை: சுவர்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக கலர்ஃபுல் ஓவியங்கள் – அவை சொல்லும் மெசேஜ் என்ன?

சுவர்களில், குடியிருப்புப் பகுதிகளில் அப்பகுதி மக்களின் வாழ்வியலை, அவர்களது பண்பாட்டை, கலாசாரத்தை எடுத்துச் சொல்லும் வகையில் ஓவியங்கள் வரைவது சமீபகாலமாகவே டிரெண்ட் ஆகிவருகிறது. அவ்வாறு, சமீபத்தில் கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்காவிற்கு எதிரில், வரையப்பட்ட ஓவியங்கள் அப்பகுதி மக்களிடைய மிகுந்த கவனத்தைப் பெற்று வருகிறது. இது குறித்து அந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களில் ஒருவரான கௌசலை அழைத்துப் பேசினோம். அப்போது பேசியவர், “நாங்க கற்பகம் காலேஜ்ல ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டெக்னாலஜி படிக்குற ஸ்டூடண்ட்ஸ். நாங்க தான் சாய்பாபா காலனி பாரதி பூங்காவுக்கு எதிரில் உள்ள சுவற்றில் ஓவியங்கள் வரைஞ்சோம்.

அந்த சுவர் கிட்டத்தட்ட 300 அடி நீளம் இருக்கும்‌. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ட்டீரியர் டிசைன்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. அதோட தலைவர் ஸ்ரீனி ஆஸிஸ் ரைச்சுரா. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 50 வருசமா இயங்கிட்டு இருக்கு. இந்த அமைப்பு வட‌மாநிலங்கள்ல நல்லா எஷ்டாபிளிஷ் ஆகியிருக்கு. தென்மாநிலங்களுக்குள்ள இப்போதான் அவங்க வர்றாங்க. பாரதி பூங்கா பெண்கள் அமைப்போடு இணைஞ்சு இந்த சுவரில் வரையச் சொல்லி எங்கள்ட்ட கேட்டிருந்தாங்க. இந்த ஐடியாவை இனிஷியேட் பண்ணது அவங்கதான்.

இந்த சுவரில் வரைய கிட்டத்தட்ட 20 மாணவர்கள், இரண்டு வாரமா வேலை செஞ்சோம். நாங்க இரண்டு குழுக்களா பிரிஞ்சு வேலை செஞ்சோம். ஒரு குழு, சுவருக்கு டிசைன் பண்றது, போஸ்டர் கிரியேட் பண்றதுன்னு பேக் கிரௌண்ட் வேலையப் பார்த்துட்டு இருந்தாங்க. ஆன் சைட்ல வொர்க் பண்ண நாங்க, அந்த சுவற்றுக்கான டிசைன வரைஞ்சோம்.

நாங்க, ‘யார்ட்ஸ் ஃபீட் ஸ்கேல்ஸ்’ங்கிற கான்செப்ட்ட அடிப்படையா வைச்சு வேலை செஞ்சோம். நாங்க ஆர்க்கிடெக்சர் & இன்டீரியர் படிக்குற மாணவர்கள் என்பதால, ஐ.ஐ.ஐ.டி எங்களுக்கு யார்ட்ஸ அடிப்படையா வைச்சுதான் இந்த சுவரில் வரையச் சொன்னாங்க. யார்ட்ஸ்ன்றது ஒரு‌ அளவு கோல் (Measuring Unit). பழங்காலத்துல சீலையை அடிப்படையா வைச்சுதான் யார்ட்ஸ அளவெடுப்பாங்க. அதனால சீலைய அடிப்படையா வைச்சு வரைஞ்சோம். ஓவியத்தோட தொடக்கத்தில் ஒரு பெண் சீலை கட்டிட்டு இருப்பாங்க. அவங்களோட சீலை, ஓவியத்தோட கடைசி வரைக்கும் பயணிச்சிட்டு வரும். பெண்கள் முன்னேற்றத்தை குறிக்கும் விதமாக அதை நாங்க பயன்படுத்தினோம். இந்த ஓவியங்களோட வரிசை எப்படி இருக்கும்ன்னு பாத்தீங்கனா, இயற்கையில் ஆரம்பிச்சு கழிவுகள்ல முடியுற மாதிரி காட்சிப்படுத்தியிருப்போம்.

யார்ட்ஸ் தான் எங்களோட கான்செப்ட்ங்கிறதால, என்னென்ன மாதிரியான யார்ட்ஸ் இருக்குன்னு நாங்க தேடுனோம். அப்படி தேடுனதுல, கோர்ட்டி யார்ட், செட்டிநாட்டு கோர்ட்டி யார்ட், கோயில் மண்டபம், ஜங்க் யார்ட், ஸ்க்ரப் யார்ட், வேஸ்ட் யார்ட் இதெல்லாம் கிடைச்சது. அப்புறம் அத மையப்படுத்தியே ஓவியங்களையும் வரைஞ்சோம்.

நாங்க வந்து பார்க்கும் போது, இந்த சுவர் ரொம்ப ஒடைஞ்சிருந்துச்சு, அங்கங்க நெறய போஸ்ட்ர்ஸ் ஒட்டியிருந்தாங்க.

ரொம்ப அசுத்தமா இருந்துச்சு. இந்த பட்டி பார்த்து, சுத்தம் பண்ணி, வெள்ளையடிக்கிறதுக்கு மட்டுமே எங்களுக்கு இரண்டு நாளாச்சு. கீழ மண்ணு வந்து ரொம்ப குண்டுங் குழியுமா நடக்கவே முடியாத மாதிரி இருந்துச்சு. அப்புறம் மாநகராட்சிக்கிட்ட டிராக்டர் வாங்கி மண்ணக் கொட்டி, நிலத்த சமப்படுத்துனோம். இதெல்லாம் பண்ணதுக்கு அப்புறம்தான் அந்த இடம் கொஞ்சம் சுத்தமா இருந்துச்சு. இதுபோக, நடுவுல ஒரு பெரிய மரத்த வேற வெட்டிப் போட்டிருந்தாங்க. அத அங்க இருந்து நகர்த்த முடியல. அதனால என்ன பண்ணிட்டோம்ன்னா, அந்த மரத்துக்கும் பெயிண்ட் பண்ணி, அதையும் கொஞ்சம் அழகியலா மாத்திட்டோம்.

இப்படி மரங்கள தொடந்து வெட்டிக்கிட்டே இருந்தா உலக வெப்பமயமாதல் இன்னும் அதிகரிச்சிக்கிட்டேதான் இருக்கும்ங்கிறதால, எங்களோட எல்லா ஓவியங்கள்லயும் மரங்கள வரைஞ்சோம். உலகம் இப்போ வெப்பமயமாகிட்டு இருக்கு, அதனால அதிகமான மரங்கள வளர்த்தா உலகம் வெப்பமயமாதலைக் குறைக்கலாம்; நம்மளோட சூழலியலைக் கொஞ்சம் பாதுகாக்கலாம் அப்படிங்கிற அர்த்தத்துல வரைஞ்சோம். இதைப்பத்தி பொதுமக்களுக்கு ஒரு‌ விழிப்புணர்வு ஏற்படுத்தணும்ங்கிறதுதான் எங்க நோக்கம்” என்று கலர்ஃபுல் எண்ணங்களுடன் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.