டி20 உலகக்கோப்பை தொடருக்கான கனடா அணி அறிவிப்பு

ஒட்டாவா,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள கனடா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு சாத் பின் ஜாபர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா அணி விவரம்;

சாத் பின் ஜாபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், திலோன் ஹெய்லிகர், தில்ப்ரீத் பஜ்வா, ஹர்ஷ் தாக்கர், ஜெர்மி கார்டன், ஜுனைத் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் தத்குர், நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டன், பர்கத் சிங், ரவீந்தர்பால் சிங், ரேயான்கான் பதான், ஸ்ரேயாஸ் மோவ்வா.

ரிசர்வ் வீரர்கள்;

தஜிந்தர் சிங், ஆதித்ய வரதராஜன், அம்மார் காலித், ஜதீந்தர் மாதரு, பர்வீன் குமார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.