Gold rate today: தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு!

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே ரோலர் கோஸ்ட் போல ஏறியும், இறங்கியும் வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வரை ரூ.55,000 வரை விறுவிறுவென ஏறி வந்த தங்கம் விலை, அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியும், இறங்கியும் வந்தது.

Gold

மே 1-ம் தேதி கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனை ஆனது. ‘இப்படியே குறையுமோ?’ என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.6,715-க்கும், ஒரு பவுன் ரூ.640 உயர்ந்து ரூ.53,720-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கும் விற்பனை ஆகிவருகிறது.

நேற்றும், இன்றும் வெள்ளி விலை மாறாமல் ஒரு கிராம் ரூ.87-க்கு விற்பனை ஆகி வருகிறது.

தங்கம் விலை இனி குறையுமா? இல்லை இப்படியே ரோலர் கோஸ்டர் தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் மக்களே…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.