நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க முயற்சிக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர்

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது.

ஆனால் மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

தொழில்முறை கிரிக்கெட்டர் போல என்னுடைய இன்னிங்ஸை வேகப்படுத்துவதில் நான் வளைவுத் தன்மையுடன் இருக்க வேண்டும். இந்த வருடம் மனிஷ் பாண்டே 4 – 5 முறை பேட்டிங் செய்வதற்காக காத்திருந்தார். ஆனால் இன்று தான் அவருக்கு பேட்டிங் செய்யும் நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் நிதானமாக விளையாடுவது அவசியமாக இருந்தது.

அப்போது நேரம் எடுத்து பிட்ச்க்கு தகுந்தார் போல் நாம் அட்ஜஸ்ட் செய்வோம் என்று அவரிடம் சொன்னேன். பந்து கொஞ்சம் நின்று வந்தது. இந்த பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க முயற்சிக்கிறேன்.

இன்று அணிக்காக தேவைப்பட்ட சூழ்நிலையில் நான் இருந்ததாக உணர்ந்தேன். நான் சவுரவ் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன். அவரிடம் என்னுடைய பேட்டிங் ஸ்டேன்ஸ் மற்றும் டெக்னிக்கல் சம்பந்தமான ஆலோசனைகளை கேட்டேன். அது இனிப்பான உரையாடலாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.