கட்டாய வெற்றியில் சிஎஸ்கே! அணியில் இத்தனை மாற்றங்களா?

PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்க இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சொதப்பலாக இருந்து வருகிறது. மேலும் சில வீரர்களின் காயமும் தற்போது முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது.  சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே இந்த சீசனில் சென்னை அணிக்காக நல்ல பேட்டிங் ஆடி வருகிறார்.  கடந்த போட்டியில் பிபிகேஎஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்த ருதுராஜ், டார்கெட்டாக 162 ரன்கள் வைத்த போதிலும் பஞ்சாப் எளிதான வெற்றி பெற்றது.

ஷஷாங்க் சிங் மற்றும் சாம் குர்ரானின் அசத்தலான பேட்டிங்கினால் சிறப்பான வெற்றி பெற்றது பஞ்சாப்.  கடந்த போட்டியில் சென்னை அணியில் காயம் காரணமாக மதீஷா பத்திரனா விளையாடவில்லை. மேலும் முதல் ஓவர் வீசும் போதே தீபக் சாஹரும் காயத்தால் வெளியேறினார்.  அதே சமயம் முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது அணிக்கு திரும்பி உள்ளார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் போன்றவர்களை நம்பி சென்னை அணி களமிறங்க வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 29 முறை விளையாடி உள்ளனர். இதில் சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

இன்றைய போட்டி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த மைதானம் பேட்டர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 11 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது, அதில் ஆறு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், ஐந்து போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த சீசனில் இதுவரை ஒரு முறை மட்டுமே டாஸ் வெற்றி பெற்றுள்ளார். எனவே, இன்றைய போட்டியில் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் பிளே ஆப் செல்ல சென்னை அணிக்கு மீதமுள்ள 4 போட்டிகளும் முக்கியம் என்பதால் இன்றைய போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

உத்ததேச சென்னை அணி (முதலில் பேட்டிங் செய்தால்)

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி, எம்எஸ் தோனி (வி.கீ), டாரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், சிமர்ஜீத் சிங், ரிச்சர்ட் க்ளீசன்

உத்ததேச சென்னை அணி (முதலில் பந்துவீசினால்)

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி, எம்எஸ் தோனி (வி.கீ), டாரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், சிமர்ஜீத் சிங், ரிச்சர்ட் க்ளீசன், முகேஷ் சவுத்ரி

இம்பாக்ட் வீரர்கள்: ஷேக் ரஷீத், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.