தமிழ்நாடு காவல்துறையின் இணையதள தகவல்கள் திருட்டா?! – விசாரிக்கும் சைபர் க்ரைம்

தமிழ்நாடு காவல்துறை, குற்றவாளிகளின் முக அடையாளம், அவர்கள் மீதான புகார்கள் ஆகியவற்றை தனித்தனியாக மென்பொருளில் (software) சேமித்து கையாள்கின்றனர். இதில், எஃப்.ஆர்.எஸ் (FRS – ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் ) எனப்படும் முக அடையாள மென்பொருளில் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களின் தரவுகள் காவல் துறையால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த முக அடையாள மென்பொருள் காவல் நிலையங்களில் சி.சி.டி.என்.எஸ்-ல் (குற்றத் தொடர்பு தரவுகள்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் காணப் பயன்படுகிறது. போலீஸாரும் தங்களின் மொபைல் போனில் எஃப்.ஆர்.எஸ் செயலியைப் பயன்படுத்திவருகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறை

இந்த நிலையில், முக அடையாளம் காணும் இந்த இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தொடங்கியிருப்பதாகவும் தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “எஃப்.ஆர்.எஸ்மென்பொருள் சிடாக் கொல்கத்தா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (எல்காட் – ELCOT) சர்வரில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 46,112 பயனர்களால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் மார்ச் 13-ம் தேதி தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையால் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், எஃப்.ஆர்.எஸ் செயலியின் இணையதளத்தில் விதிமீறல் இருப்பதாக ஒரு முகவரியிலிருந்து தகவல் வந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அட்மின் அக்கவுன்ட்டில் பாஸ்வேர்டு ஹேக்கர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சைபர் க்ரைம்

இந்த அட்மின் அக்கவுன்ட்டில், பயனர்களுக்கான ஐ.டி.யை உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட விவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இது சம்பந்தமாக, எல்காட், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை, சிடாக் நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.