TNPSC Group 4: அரசுப் பணி கனவுடையோருக்கு அரிய வாய்ப்பு!; கல்வி விகடன் நடத்தும் மாதிரி தேர்வு!

TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுடன் பலரும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும் நடராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் TNPSC-யும் இணைந்து குரூப்-4 தேர்வுக்கான மாதிரித் தேர்வை நடத்தி வருகிறது.

இத்தேர்வு இன்று மே 5-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறும். கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு இந்த மாதிரி தேர்வு தொடர்ந்து நடைபெறும். அனுபவமுள்ள் நிபுணர்கள் அதீத உழைப்பைச் செலுத்தி தரமான வினாத்தாள்களை தயார் செய்திருக்கிறார்கள்.

TNPSC Group 4

இந்த மாதிரி தேர்வு தினமும் சரியாக காலை 9 மணிக்கு தொடங்கும். மறுநாள் காலை 9 மணிவரை அந்தத் தேர்வை எழுதலாம். 9 மணிக்குப் பிறகு அந்த நாளுக்கான வினாத்தாள் வெளியாகும். இந்த மாதிரித் தேர்வுக்கு கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் எழுதலாம். இந்த மாதிரித் தேர்வுக்கு கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் எழுதலாம். தினமும் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்களுக்குள் தேர்வை நிறைவு செய்யவேண்டும்.

100 கேள்விகளுக்கும் விடை எழுதி முடித்ததும் நீங்கள் பெற்ற மதிப்பெண்களைக் காணலாம். மேலும் நீங்கள் தவறாக விடையளித்த கேள்விகளுக்கான சரியான பதிலையும் தெரிந்து கொள்ளலாம். பழைய வினாத்தாள்கள், பாடத்திட்டங்களில் இருந்து நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்ட கேள்விகள் இந்த மாதிரித் தேர்வில் கேட்கப்படும்.

TNPSC

குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு எழுதி பழகுவதற்கும் நீங்கள் படித்தவற்றை நினைவுப்படுத்தி பார்ப்பதற்கும் குரூப் 4 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கும் இந்த மாதிரித் தேர்வு உங்களுக்கு உதவும்.

இங்கு கிளிக் செய்து இந்த மாதிரி தேர்வை எழுதுங்கள். நீங்கள் பெற்ற மதிப்பெண்களை கீழே கமென்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.