What to watch on Theatre & OTT: அரண்மனை -4, மஞ்சும்மல் பாய்ஸ் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

அரண்மனை -4 (தமிழ்)

அரண்மனை 4

சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘அரண்மனை -4’. காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா) அவரது கணவரும் (சந்தோஷ் பிரதாப்) இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார் சுந்தர் சி. அவர்கள் மரணத்திலும் இருக்கும் சந்தேகங்களையும், அமானுஷ்யங்களையும் கண்டுபடித்து தொடர் கொலைகளுக்குக் காரண்மானவர்களைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

குரங்கு பெடல் (தமிழ்)

குரங்கு பெடல்

கமலக்கண்ணன் இயக்கத்தில் சந்தோஷ் வேல்முருகன், காளி வெங்கட், ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலசந்தர், செல்லா மற்றும் நான்கு சிறுவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரங்கு பெடல்’. பள்ளி கோடை விடுமுறையின் போது சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளவதில் போட்டிபோடும் இரண்டு சிறுவர்களின் நாஸ்டால்ஜியா கதை இது. 80ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவே இந்த `குரங்கு பெடல்’ மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சபரி (தமிழ்)

சபரி

அனில் கட்ஸ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், மது நந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சபரி’. சயின்ஸ் பிக்ஷன், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அக்கரன் (தமிழ்)

அக்கரன்

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், கபாலி விஷ்வந்த், வென்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அக்கரன்’. இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான வீராபாண்டியண், தனது மகள், கொலைக்குக் காரணத்தையும், அதன் பின்னணியையும் கண்டறிந்து பழிதீர்த்தாரா என்பதான் இதன் கதைக்களம். திரில்லர் திரைப்படமான இது  இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நின்னு விளையாடு (தமிழ்)

நின்னு விளையாடு

செளந்தர் ராஜா இயக்கத்தில் தினேஷ் மாஸ்டர், நந்தனா ஆனந்த், சிவ குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நின்னு விளையாடு’. வளர்ப்புக் காளையின் மீதான பாசமும், கிராமத்துக் குடும்பத்தின் அழகாக வாழ்க்கையையும், அங்கு நடக்கும் பிரச்னைகளையும் மையப்படுத்தியது இதன் கதைக்களம். இத்திரைப்படம் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Malayalee From India (மலையாளம்)

Nivin Pauly | Malayalee From India Review

டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி, ஶ்ரீனிவாசன், அனஸ்வர்யா ராஜன், சலீம் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Malayalee From India’. வேலையில்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞனின் வாழ்க்கையைப் பற்றியது இதன் கதை. இத்திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Nadikar (மலையாளம்) 

Nadikar

லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ், ஷோபின் ஷாஹிர், பாவனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Nadikar’. திடீரென சூப்பர் ஸ்டாராகிவிடும் நடிகரின் காமெடியாக கதை இது. இத்திரைப்படம் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Prasanna Vadanam (தெலுங்கு)

Prasanna Vadanam

அர்ஜுன் இயக்கத்தில் சுஹாஸ் பாகொலு, பயல் ராதாகிருஷ்ணன், ராஷி சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Prasanna Vadanam’. திரில்லர் திரைப்படமான இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Aa Okkati Adakku (தெலுங்கு)

Aa Okkati Adakku

மல்லி அன்கம் இயக்கத்தில் அல்லரி நரேஷ், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Aa Okkati Adakku’. காமெடி, காதல், ஃபேமலி திரைப்படமான இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Exhuma (கொரியன்)

Exhuma

ஜாங் ஜியா ஹுயுன் இயக்கத்தில் சோய் மின் சிக், கிம் கோ யின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கொரியன் திரைப்படம் ‘Exhuma’. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Tarot (ஆங்கிலம்)

Tarot

ஸ்பென்சர் கோஹென் இயக்கத்தில் ஹரியட் ஸ்லட்டர், ஆடைன் பிராட்லி, அவன்டிகா வண்டனபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘Tarot’. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Fall guy (ஆங்கிலம்)

Fall guy

டேவிட் லெய்ட்ச் இயக்கத்தில் ரயான் கோஸ்லிங், எமிலி பிளன்ட், வின்ஸ்டன் டியூக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Fall guy’. காமெடி கலந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

இந்த வார ஓடிடி ரிலீஸ்

The Idea of you (ஆங்கிலம்)

The Idea of you

மைக்கேல் ஷோவால்டர் இயக்கத்தில் அன்னே ஹாத்வே, நிக்கோலஸ், எல்லா ரூபின் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Idea Of You’. காதல், காமெடி திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த வார வெப்சீரிஸ்கள்

The veil (ஆங்கிலம்) – Disney + Hotstar 

The veil

ஸ்டீவன் க்னைட் உருவாக்கத்தில் எலிசபத் மோஸ், ஜோஷ் சார்லஸ், யும்னா மர்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The veil’. திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Heeramandi: The Diamond Bazaar (இந்தி) – Netflix

Heeramandi: The Diamond Bazaar

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மனிஷா கொய்ரலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Heeramandi: The Diamond Bazaar’. சுதந்திர இந்தியாவிற்கு முன் அரண்மனையில் இருந்த பெண்களின் காதல், அவர்களுக்கு நடந்த துரோகம், அவர்களின் சுதந்திர உணர்வு பற்றி பேசும் இந்த வெப்சீரிஸ் “Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Clarkson Farm -3 (ஆங்கிலம்) – Amazon Prime Video

Clarkson Farm -3

கிட் லைன்ச் ராபின்சன், ஜெரெமை கிளார்க்சன், கலீப் கூப்பர், சார்லி உள்ளிட்டோர்ன் நடிப்பில் ஏற்கனவே வெளியான இரண்டு சீசன்களின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது இந்த மூன்றாவது சீசன். விவசாயம் செய்யும் கிளார்க்சனின் வாழ்க்கைதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Hacks Season 3 (ஆங்கிலம்) – Jio Cinema

Hacks Season 3

லூசியா அனியெல்லோ இயக்கத்தில் ஜீன் ஸ்மார்ட், ஹன்னா எயின்பிண்டர், கைட்லின் ஒல்சன், கிறிஸ்டோபர் மெக்டொனால்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Hacks’. இதன் இரண்டு சீசன்களைத் தொடர்ந்து தற்போது இதன் மூன்றாவது சீசன் வெளியாகியுள்ளது. பெண் ஸ்டாண்ட் அப் காமெடி பணி செய்யும் பெண்னின் வாழ்க்கையைச் சொல்லும் கதை இது. இந்த வெப்சிரீஸ் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

தியேட்டர் டு ஓடிடி

Dear (தமிழ்) – Netflix

Dear

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘DeAr’. திருமணமான புது தம்பதிகளான ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமிடையே சின்னச் சின்ன சண்டைகள் வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டைப் பிரச்னை ஜி.வி.பிரகாஷுக்குப் பெரும் தொல்லையாகிறது. இதனால் மாறிமாறி சண்டைப் போட்டுக்கொள்ளும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டார்களா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Manjummel Boys (மலையாளம்) -Disney + Hotstar

Manjummel Boys

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், சந்து சலீம்குமார், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Manjummel Boys’. கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக குணா குகையில் இருக்கும் குழியில் மாட்டிக் கொள்கிறார். அவரைக் காப்பாற்றப் போராடுவதுதான் இதன் கதைக்களம். சாதாரண ஒரு சம்பவத்தை சர்வைவல் திரைப்படமாக மாற்றி சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Shaitaan (இந்தி) – Netflix

Shaitaan

விகாஷ் பாஹ்ல் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஆர். மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Shaitaan’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Avatara Purusha 2 (கன்னடம்) – Aha

Avatara Purusha 2

சிம்பிள் சுனி இயக்கத்தில் ஷரன், அஷ்திகா ரங்கநாதன், சாய்குமார் உள்ளிட்டோர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Siddharth roy (தெலுங்கு) – Aha

Siddharth roy

வி.யேஷஸ்வி இயக்கத்தில் மேத்யூ வர்கீஸ், தீபக் சரோஜ், தன்வி நேகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Siddharth Roy’. காதல் திரைப்படமான இது, தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Migration (ஆங்கிலம்) – Jio Cinema

Migration

பெஞ்சமின் ரென்னர் இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் இது. மூன்று வாத்துகள், கண்டிப்பான தங்களின் தந்தை வாத்து அவர்கள் சந்திக்கும் சாகசங்களே இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Wonka (ஆங்கிலம்) – Jio Cinema

Wonka

பால் கிங் இயக்கத்தில் திமோதி சாலமேட், குஸ்டாவ் டை, முர்ரே மெக்ஆர்தர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wonka’. அட்வன்ச்சர், காமெடி கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.