Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்… ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்

திங்கட்கிழமை மாலை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பிளேயர் சூர்யகுமார் யாதவ் 360 டிகிரியில் சுழன்றடித்து சதமடித்தார். 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் நீண்ட நாட்களாக பத்தாவது இடத்தில் இருந்த அந்த அணியும் இப்போது ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவ் என்று சொல்லலாம். 

ஏனென்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் பார்ம் இல்லாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், சூர்யகுமார் மிடில் ஆர்டரில் மீண்டும் பார்முக்கு வந்திருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி சூர்யகுமார் யாதவிடம் இல்லை. ஆம், அவரை மும்பை இந்தியன்ஸ் நடத்திய விதம் குறித்து கடும் வருத்தத்தில் இருக்கும் சூர்யகுமார், அடுத்த ஆண்டு அந்த அணியை விட்டு வெளியேறவும் முடிவு செய்திருக்கிறார்.

சூர்யகுமார் குமார் வருத்தத்துக்கு காரணம் என்ன?

May 3, 2024

சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது அதிருப்தியில் இருப்பதற்கு காரணம், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது தான். இதனை ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் சுத்தமாக விரும்பவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடமே இருக்க வேண்டும் என அவர்கள் இருவரும் விரும்பினர். ரோகித்தை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டிய தேவை எங்கும் ஏற்படவில்லை என நினைத்த அவர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றத்துக்கு சூர்யகுமார், ஜஸ்பிரித் பும்ரா இருவரும் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தனர். 

சூர்யகுமார் யாதவ் வெளியேற முடிவு

அப்படி மாற்றம் வேண்டும் என நிர்வாகம் நினைத்திருந்தால் அணிக்காக நீண்ட நாட்களாக இருக்கும் தங்கள் இருவரில் யாரேனும் ஒருவரிடம் கேப்டன் கொடுத்திருக்கலாமே என்பது தான் சூர்யகுமார் யாதவ் ஆதங்கத்துக்கான முக்கிய காரணம். இதனை ரோகித் சர்மாவும் வரவேற்றிருப்பார். ஆனால், பணத்துக்காக மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறிய ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அவர் எதிர்பார்க்கும் பணத்தை கொடுத்து அழைத்து வந்திருப்பது என்பது, விசுவாசத்துக்கான மதிப்பை கேள்விக்குள்ளாகிறது என நினைக்கிறார் பும்ரா. மறைமுகமாக இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அதனால், தானும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேற சூர்யகுமார் யாதவ் முடிவெடுத்துவிட்டார். பும்ரா, ரோகித் சர்மா ஆகியோரும் இந்த லைனில் இருக்கின்றனர்.

சூர்யகுமார் யாதவ் செல்லும் அணி

சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தங்கள் அணிக்கு கொண்டு வந்தது. இப்போது மீண்டும் கேகேஆர் அணிக்கு செல்லும் விருப்பத்தை அந்த அணியிடமும் தெரிவித்துவிட்டார் சூர்யகுமார். இதற்கு அந்த அணி நிர்வாகமும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாம். அதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் ஜெர்சியில் சூர்யகுமார் யாதவை பார்க்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.