ஏப்ரல் 2024 மாதந்திர விற்பனையில் சிறந்த 25 கார்கள் பட்டியல்..!

கடந்த 2024 ஏப்ரல் மாதாந்திர விற்பனையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டாப் 25 கார்களில் முதலிடத்தை டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் 19,158 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் ஏழு இடங்களில் மாருதி சுசுகி நிறுவன மாடல்கள் உள்ள நிலையில் அடுத்த டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் மூன்று இடங்களை பகிர்ந்து கொள்கின்றன.

மிக முக்கியமான இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது குறிப்பாக இந்நிறுவனத்தின் வேகன் ஆர் பிரெஸ்ஸா, டிசையர் ஃபிரான்க்ஸ், பலேனோ, எர்டிகா ஈகோ மற்றும் ஆல்டோ K10, கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பட்டியலில் பார்க்க வேண்டும் என்றால் மாருதி ஸ்விஃப்ட் காரானது, டாப் 25 இடங்களில் கூட இடம் பெறவில்லை ஏனென்றால் நாளை புதிய மாடல் விற்பனைக்கு வெளியாகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. பொதுவாக, எப்பொழுதும் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற டாடா நெக்ஸான் இந்த முறை பின் தள்ளப்பட்டு 11 இடத்தில் உள்ளது.

Top 25 cars and suv list

வரிசை தயாரிப்பாளர் April ’24 April ’23 YoY Growth
1 டாடா பஞ்ச் 19,158 10,934 75%
2 மாருதி வேகன் ஆர் 17,850 20,879 -15%
3 மாருதி பிரெஸ்ஸா 17,113 11,836 45%
4 மாருதி டிசையர் 15,825 10,132 56%
5 ஹூண்டாய் கிரெட்டா 15,447 14,186 9%
6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 14,807 9617 54%
7 மாருதி ஃபிரான்க்ஸ் 14,286 8784 63%
8 மாருதி பலேனோ 14,049 16,180 -13%
9 மாருதி எர்டிகா 13,544 5532 145%
10 மாருதி ஈக்கோ 12,060 10,504 15%
11 டாடா நெக்ஸான் 11,168 15,002 -26%
12 மஹிந்திரா பொலேரோ 9537 9054 5%
13 ஹூண்டாய் வெனியூ 9120 10,342 -12%
14 மாருதி ஆல்டோ 9043 11,548 -22%
15 கியா சொனெட் 7901 9744 -19%
16 ஹூண்டாய் எக்ஸ்டர் 7756
17 மாருதி கிராண்ட் விட்டாரா 7651 7742 -1%
18 டொயோட்டா இன்னோவா 7103 4837 47%
19 டாடா டியாகோ 6796 8450 -20%
20 கியா செல்டோஸ் 6734 7213 -7%
21 மஹிந்திரா தார் 6160 5302 16%
22 மஹிந்திரா XUV700 6134 4757 29%
23 கியா கேரண்ஸ் 5328 6107 -13%
24 ஹூண்டாய் i20 5199 6472 -20%
25 டாடா அல்ட்ராஸ் 5148 4658 11%

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.