கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் 

கிளிநொச்சி  மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன்  தலைமையில் நேற்று (07)  நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில், மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டன. 

இதன்போது நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட வேண்டிய வியாபார நிலையங்கள், பிரதேச சபைக்கு பாரப்படுத்த வேண்டியவை, நீண்டகால குத்தகையில் காணி வழங்குதல், காணிக் கச்சேரி முன்மொழிவிற்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவு ரீதியாக  மொத்தமாக 192 காணிக் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன. 

இவற்றுள் ஒரு காணிக் கோரிக்கை விண்ணப்பத்தின் சிபாரிசுகள் காலதாமதப்படுத்தப்பட்டது . குறித்த விண்ணப்பம் தொடர்பில் மேலதிக ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அடுத்த கூட்டத்தில்  சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.