வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தினால் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது – ஜனாதிபதி

வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் பொருளாதார வளர்ச்சிக்கான பயணம் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

அபாயத்தில் வீழ்ந்திருந்த நாட்டையே தான் பொருப்பேற்றேன். ஒரு கடினமான நேரத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எந்த நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றினேன், அச்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தது மூன்று சதவீதமாக காணப்படும் என்று நினைக்கிறேன். தற்போது வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது.

சவாலான மற்றும் கடினமான பாதையில்; பயணிக்க முடிந்ததால் தான் இந்த நிலைமைக்கு வர முடிந்தது.

அத்தனை அவதூறுகளுக்கு மத்தியிலும் கொடிப் பாலத்தைக் கடக்க ஆரம்பித்து விட்டோம். அரச வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எமக்கு இருக்கவி;ல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப யாராவது ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதேபோன்ற முன்னறிவிப்புகளைச் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.