வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் உத்தியோகபூர்வ தொழில் ஒப்பந்தத்தின் கீழ் மாத்திரமே தொழிலுக்காகச் செல்ல வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி

திறந்த விசா அல்லது சுற்றுலா விசாவின் கீழ் வெளிநாட்டுத் தொழிலுக்கு செல்லுபடியாகும் உத்தியோகபூர்வ தொழில் ஒப்பந்தத்தின் கீழ் சட்ட ரீதியான முறையின் கீழ் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறில்லாது விடின் கஷ்டத்தில் விழ வேண்டியேற்படும் என நாட்டு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தவறான வழியில் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் தேடுவதற்கு கஷ்டப் படும் போது அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமாக செய்யக்கூடியவை மட்டுப்படுத்தப்பட்ட விடயங்கள் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராஜதந்திர சலுகைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்குச் சென்ற பின்னர் அந்த நாட்டில் நிறுவப்பட்டுள்ள இலங்கைத் தூதுவராலயங்களில் பதிவு செய்து அந்த நாட்டுத் தூதுவர்களுடன் கலந்துரையாடி தொடர்பேற்படுத்திக் கொள்வது மிக முக்கியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மியன்மார் நாட்டில் மியாஆட் எனும் பிரதேசத்தில் எமது நாட்டு இளைஞர் யுவதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூன்று குழுக்கள் மாத்திரம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் 49 பேர் மீட்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த நாட்டு அரசாங்கம், வெளிநாட்டமைச்சர் ஆகியோருடன் இப்பிரச்சினை தொடர்பாக எழுத்து மூலமும் பேச்சுவாரத்தை ஊடாகவும் ஜனாதிபதி மற்றும் நான் கலந்துரையாடியதாகவும், அதன் பெறுபேறான 20 பேரை மாத்திரம் காப்பாற்ற முடிந்துள்ளதுடன், அந்த நபர்கள் தாய்லாந்தின் எல்லைக்கு கொண்டு வந்து அங்கிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மியன்மாரின் மியஆடி பிரதேசம் அந்நாட்டு அரசாங்கத்தின் நிருவாகத்திற்கு அப்பால் செயற்படுவதால் அந்நாட்டின் அரசாங்கத்திற்கும் இப்பிரச்சினை தொடர்பில் தலையிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே முடிந்துள்ளதாகவும், அவ்வாறே எப்படியாவது மீட்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்தாதிருப்பதாகவும், இந்த இளைஞர் யுவதிகளை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.